செவ்வாய், 9 அக்டோபர், 2012

விஜயகாந்த்: தி.மு.க - அ.தி.மு.க - காங்கிரஸ் நம்பர் ஒன் பிராடுகள்

""வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள். மூன்று கட்சிகளும், "நம்பர் ஒன் பிராடுகள்,'' என, விஜயகாந்த் பேசினார். ( காணாமல் போவது அல்லது வீணாப்போவது என்று முடிவு எடுத்த பின் வாயில வந்ததெல்லாம் பேச வேண்டியதான் ? விஜயராஜா என்கின்ற விஜயகாந்த் ஜாதகத்தில் வைகோ யோகம் ரொம்ப ரொம்ப )
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வான விஜயகாந்த், தன் தொகுதிக்கு அரசு அளிக்கும், மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட, குடிநீர் குழாய் பாதையை, நேற்று மதியம் திறந்து வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:கிராம மக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பேன். அடிக்கடி என்னால் தொகுதிக்கு வர முடியாது. நான் அங்கிருந்தால் தான் (சென்னை), மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆர்க்கவாடி - அரும்பராம்பட்டு, பிரம்மகுண்டம் - ராவுத்தநல்லூர் இரண்டு இடங்களிலும் பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்க உள்ளன.மணலூர்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இங்கு இருந்து கொண்டே, நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தீர்த்து வைக்கப்படும்.


சில ஊராட்சித் தலைவர்கள் காசு வாங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர். குறைகளை மக்கள் கேட்டால், எம்.எல்.ஏ.,வை போய் கேள் என்கின்றனர். இவர்கள் எதற்காக இருக்கின்றனர். மக்கள் புரட்சி வெடித்தால் தான், இதற்கெல்லாம் தீர்வு வரும்.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள். மூன்று கட்சிகளும், "நம்பர் ஒன் பிராடுகள்!'இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக