ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தே.மு.தி.க., வை உடைக்கிற, "அசைன்மென்டை' இரண்டு அமைச்சர்களுக்கு

""அமைச்சர்கள் கையில் தான் ஒப்படைச்சிருக்காவ வே...'' என, "நறுக்' தகவலுடன் நாயர் கடைக்குள் நுழைந்தார் பெரியசாமி அண்ணாச்சி.""எந்த திட்டமுங்க...''எனக் கேட்டார் அந்தோணிசாமி.""தே.மு.தி.க., வை உடைக்கிற, "அசைன்மென்டை' அ.தி.மு.க.,வுல, இரண்டு சீனியர் அமைச்சர்கள் தான் கவனிக்காவ... எம்.எல்.ஏ.,க்களை இழுத்துட்டு வர்ற அமைச்சர்களுக்கு, பாராட்டு உண்டு... மாவட்ட அளவில் உள்ள, தே.மு.தி.க., பிரமுகர்களை இழுக்கவும், மாவட்டச் செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பிச்சிருக்காவ வே...'' என, ரத்தினச் சுருக்கமாய் கூறி முடித்தார் அண்ணாச்சி.""யாருங்க அந்த ரெண்டு அமைச்சருங்க... அப்படீன்னா, இனி யார் கூட, தே.மு.தி.க.,காரங்ககூட்டணி வைப்பாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
""பாராட்டு கிடைச்சப்பறம் சொல்றேன்... ஆனா இனி, விஜயகாந்த்தை, யாரு சேர்த்துப்பாங்க... கூட்டணில சேர்த்து, 29 எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபைல உட்கார வச்சதுக்கு பலனா, "யாரும் சரியில்லே... அ.தி.மு.க.,வே சரியில்லே...'ன்னு மொழக்கம் போட்டாரு... இப்படிப் பட்ட குணம் கொண்டவரை, இனி யாரு, எந்த கட்சில சேர்த்துப்பாவ... சொல்லுங்க...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
யாரும் வாய் திறக்கவில்லை!""காங்கிரசோட வேலையைப் புரிஞ்சுக்கிட்டு, கட்காரியைக் கைவிடாம காப்பாத்திட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய். http://www.dinamalar.com/

""என்ன உள்குத்துங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.""பா.ஜ., கட்சியை உடைக்க, காங்கிரஸ் தீவிரமா முயற்சி செஞ்சுச்சு... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பிரதமர் வேட்பாளர் ஆக, முழுத் தகுதி, குஜராத் முதல்வர் மோடிக்கு இருக்குன்னு சொன்னப்ப, அவரோட பேரை, "டேமேஜ்' செய்ய, பல முயற்சிகள் நடந்துச்சு... அதையெல்லாம் அவரு முறியடிச்சாரு...
""இப்ப, லோக்சபா தேர்தலுக்கு முன்னாடியே, பா.ஜ., கட்சியை உடைக்க, அந்தக் கட்சி மேலிடத்துலயே கை வச்சிட்டாங்க... கட்காரி மேலே சேற்றை வாரித் தெளிச்சிட்டாங்க... பா.ஜ., கட்சிக்குள்ளாற இருக்குற, மத்த தலைவர்களையும் தூண்டி விட்டு, கட்காரியை வெளியேத்தறா மாதிரி, "சீன்' போட திட்டமிட்டது காங்கிரஸ்...

""சீனியர் தலைவர்கள் சில பேர், அதைப் புரிஞ்சுக்கிட்டு, "தலைவர் பதவியில், தொடர்ந்து கட்காரி நீடிப்பார்'ன்னு சொல்லிட்டாங்க... "சந்துல சிந்து பாடுறது'ன்னு கேள்விபட்டிருக்கீங்களா... அது போல, அந்தக் கட்சில மூத்த தலைவர் ஒருத்தரு, மறுபடி கட்சித் தலைவர் பதவி நமக்குக் கிடைக்குமோங்கற நப்பாசைல, ரெண்டு நாளா சந்தோஷமாவே இருந்தாரு பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

""பெரிய அளவுல அரிசி கடத்தல் செய்ய திட்டமிட்டிருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.""எந்தூர்ல ஓய்...'' என, தூக்கத்திலிருந்து விழித்தவர் போல, திடீரென கேள்வி எழுப்பினார் குப்பண்ணா.""கிறிஸ்துமஸ், பொங்கல்ன்னு பண்டிகைங்க நெருங்கறதால, அரிசி கடத்தல் செய்யணும்ன்னு திட்டமிட்டு, கேரள அரிசி வியாபாரிகள், தேனி மாவட்டம், கம்பத்துலயே வந்து தங்கி இருக்காங்க... தமிழக அரசு விழிச்சுக்கலேன்னா, "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா' கதை தான் ஆகும்...'' எனக் கூறி, வேகமாய் நடையைக் கட்டினார் அந்தோணிசாமி.இவர் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறார் என, வியந்தபடியே, மற்றவர்கள், அவரைப் பின் தொடர்ந்தனர்!

சண்டையுமில்லே... சச்சரவுமில்லே...!

நான்கு பேர் டீக்கடைக்கு வந்தாலே, நாயருக்கு முகமெல்லாம் மலர்ந்து விடும். இன்றும் அப்படியே...""சண்டையுமில்லே... சச்சரவுமில்லே... சும்மா விஷயங்களை சுத்தவிட்டு வேடிக்கை பாக்குறாங்க...'' என, பூடகமான முதல் தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.""யாரு பா... கட்சியா... ஆட்சியா... இங்கயா... மத்தியிலா...'' என, கேள்வியை அடுக்கினார் அன்வர்பாய்.
""இங்கேயும், மதுரைலயும்... போன வாரம், அண்ணனும், தம்பியும் சந்திச்சு, ஒரு மணி நேரம் பேசினாங்க இல்லியா... அதுக்கப்புறம் நடந்த சம்பவங்களைக் கூர்ந்து கவனிச்சா, ஒரு விஷயம் புரியும்... ரெண்டு பேரும் சந்திச்ச மறு நாளே, "என்னோட ஆலோசிக்காம, இளைஞர் நிர்வாகிகள் பட்டியல் வெளியா யிடிச்சு'ன்னு அண்ணன் சொல்ல, அதை வெளியிட்ட தம்பியோ, "சிபாரிசுக்கெல்லாம் வாய்ப்பே இல்லேண்ணே' என, மறைமுகமாகத் தாக்கினார்...

""இப்படி கவனத்தை திசை திருப்பி, சிறையில் இருக்குற, "மாஜி' பொன்முடியை, தன் மகனோடு போய் பார்த்துட்டு வந்திருக்காரு தம்பி... இதுலேர்ந்து என்ன புரியறது... "நீங்க அடிக்கறா மாதிரி அடிங்க... நான், அழுறா மாதிரி அழுறேன்... நம்ம குடும்பத்துல, எல்லா வாரிசுகளும், கட்சில இறங்கிடணும்... லோக்சபா தேர்தல்ல நிக்குறதுக்கு... "இன்னொரு' ஆளுக்கு, "செக்' வக்கிறதுக்கெல்லாம், இது தான் சரியான வியூகம்...'ன்னு பேசி முடிவு பண்ணி தான் களத்துல இறங்கி இருக்காங்க...'' எனக் கூறி முடித்தார் அந்தோணிசாமி.""முதல்வர் அலுவலகத்துக்கு தெரியாமலேயே, ஒருத்தருக்கு பதவி நீட்டிப்பு தர, முயற்சி செய்றாங்க பா...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அன்வர்பாய்.

""யாருக்கு, எந்த துறையிலேன்னு, விவரமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.""சென்னை, நெற்குன்றத்துல அரசு அதிகாரிகளுக்கு, வீட்டு வசதி வாரியம் மூலமா, சொந்த வீடு கட்டும் பணி நடந்துக்கிட்டிருக்கு பா... அந்த திட்டத்துக்கு, பொறுப்பு அதிகாரியா பதவி நீட்டிப்புல இருக்கிறவருக்கு, முதல்வர் அலுவலகத்துக்கு தெரியாமலேயே, மீண்டும் பதவி நீட்டிப்பு தர முயற்சி நடக்குது பா...""அதிகாரிகளுக்கு வீடு கட்டும் திட்டத்துல அவரு, விதிகளுக்கு மாறா, அதிக விலை உள்ள கட்டுமானப் பொருட்களை பயன்படுத்த, தாராள மனசோட நடந்துக்கறதால, இந்த சலுகைன்னு, மத்த அதிகாரிங்க புலம்புறாங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.

""குலதெய்வம் முத்துசாமிக்கிட்டே தான் வேண்டிக்கணும், இதுக்கு ஒரு தீர்வு கிடைக்க...'' என, நொந்து போனார் அண்ணாச்சி.""துணை மேயரை ஒதுக்கி வச்சுட்டா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.""என்ன வே... ஊரை விட்டு ஒதுக்கி வெச்ச மாதிரி சொல்றீர்... விஷயத்துக்கு வாரும்...'' என்றார் அண்ணாச்சி.

""மதுரை மாநகராட்சில, கோபாலகிருஷ்ணன்ங்கறவர் தான் துணை மேயரா இருக்கார்... சைலன்ட்டா இருந்தாலும், அவர் மேலே பலருக்கும் புகைச்சல் தான்... மேயருக்கும், இவருக்கும், நல்ல, "அண்டர்ஸ்டாண்டிங்' இருந்தது... என்ன நடந்துதோ தெரியலே... கொஞ்ச நாளா, ரெண்டு பேருக்கும், புகைச்சல் கிளம்பிடுத்து... மாநகராட்சி சம்பந்தமா, எந்த தகவலையுமே அவர்ட்ட சொல்றதில்லே... காரணம் தெரியாம, கோபாலகிருஷ்ணன் புலம்பிண்டிருக்கார் ஓய்...'' எனக் கூறியபடி, கிளம்பினார் குப்பண்ணா.மற்றவர்களும் கிளம்பவே, நாயர் முகம் வாடியது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக