வியாழன், 18 அக்டோபர், 2012

அது தலிபான்களுக்கு பிடிக்காது? பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு

Malala Yousafzai
Malala Yousafzai, the Pakistani schoolgirl who was shot by the Taliban for speaking out against militants and promoting education for girls.
For making headlines worldwide (the right way).
Photograph: Reuters

எனது வகுப்பறை...!
2009 ஜனவரி 3.
நேற்று இரவு மிகவும் பயங்கரமாகக் கழிந்தது. ராணுவ ஹெலிகாப்டர்களும் தலிபான்களும் என் கனவில் வந்துகொண்டே இருந்தனர். எனது இதயம் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கில் ராணுவத் தாக்குதல்கள் துவங்கிய நாள் முதலே இப்படிப்பட்ட கனவுகள் துன்புறுத்துகின்றன. பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என தலிபான்கள் உத்தரவு போட்டிருக்கிறார்கள். எங்கள் வகுப்பில் 27 பேரில் 11 பேர் மட்டுமே வருகிறார்கள்”.

2009 ஜனவரி 5. காலையில் பள்ளிக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். பள்ளிச் சீருடையை அணிவதற்கு கையில் எடுத்தபோதுதான் நினைவுக்கு வந்தது. யாரும் சீருடை அணிந்து கொண்டு வராதீர்கள் என்று பள்ளி முதல்வர் கூறியிருக்கிறார். எனவே எனக்குப் பிடித்தமான இளஞ்சிவப்பு நிற உடையை அணிந்துகொண்டேன். எனது நண்பிகள் எல்லோருமே சீருடைக்கு பதிலாக வேறு உடை அணிந்து வந்தார்கள். அன்று பள்ளிக்கூடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. ஆனால் மைதானத்தில் இறைவணக்கத்திற்காக கூடியபோது, வண்ண உடைகளும் அணியக்கூடாது; அது தலிபான்களுக்கு பிடிக்காது என்று முதல்வர் அறிவித்தார்”.
2009 ஜனவரி 14.
நாளையிலிருந்து குளிர்கால விடுமுறை துவங்கப்போகிறது. ஆனால் என் மனது மிகவும் வேதனையோடு இருக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படித்தான். விடுமுறை என்ற மகிழ்ச்சி எங்களிடம் இல்லை. ஏனென்றால் விடுமுறையை அறிவித்த பள்ளி முதல்வர், மீண்டும் எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்பதைச் சொல்லவில்லை. தலிபான்களின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடாது என அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள். இனிமேல் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரவே முடியாமல் போய்விடுமோ? வகுப்பறையை விட்டு வெளியே வரவே மனமில்லை. இனிமேல் நான் எப்போது இங்கு வரப்போகிறேன்?”.
* * *
பேரழகு ததும்பும், பச்சைப் பசேலென்ற மலைகள் சூழ்ந்த பகுதி ஸ்வாட் பள்ளத்தாக்கு.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வசிரிஸ்தான் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள முக்கிய நகரம் மிங்கோரா. இங்கு தனியார் மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிற ஒரு கல்வியாளரின் மகள் மலாலா யூசப்ஜாய். அந்த 11 வயதுச் சிறுமி எழுதிய டைரிக் குறிப்புகள்தான் மேலே நாம் படித்தது. தலிபான்களின் உத்தரவால் ஏற்கெனவே 2008ம் ஆண்டில் வசிரிஸ்தான் பிரதேசத்தில் 150 பள்ளிக்கூடங்கள் அழிந்துவிட்டன. 2009ல் அவர்கள், ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிக்கூடங்களை குறி வைத்தார்கள். மிங்கோரா நகரத்தில் குஷால் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி மலாலாவால், தலிபான்களின் கட்டளையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டாக்டராக வேண்டுமென்ற கனவோடு படித்துக் கொண்டிருக்கும் நான் ஏன் பள்ளிக்கூடம் போகக்கூடாது என மனதுக்குள் கேள்வி எழுப்பினாள். தந்தை கொடுத்த தைரியத்தால், அந்தக்கேள்வியை ஊர் முழுக்க உரக்க எழுப்பினாள். சக மாணவிகளை தைரியப்படுத்தினாள். தலிபான்களின் கட்டளையை மீறி பள்ளிக்கூடத்திற்கு வந்தாள். சில நாட்களில் இதர மாணவிகளும் துணிவு கொண்டவர்களாக பள்ளிக்கு வந்தார்கள்.
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைத் தாண்டி இச்செய்தி நாடெங்கும் பரவியது. தலிபான்களை எதிர்த்து, பெண் கல்வி உரிமையை நிலைநாட்டிய மலாலாவை, பாகிஸ்தான் முழுவதும் உள்ள குழந்தைகளும் பெண்களும் போற்றினார்கள். உலக அளவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அமைதி விருதுக்கு மலாலாவின் பெயர் 2011ல் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் பாகிஸ்தான் அரசாங்கமே மலாலாவுக்கு தேசிய அமைதி விருது வழங்கி கவுரவித்தது. * * *
தலிபான்கள், இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தையும், அதை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பயங்கரவாதத்தையும் தூக்கிப்பிடிக்கும் கொடியவர்கள்.
ஆப்கானிஸ்தானம் இவர்களது பிறப்பிடம். அமெரிக்காவே இவர்களை உருவாக்கிய தந்தை.
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தார்கள்; ஜனநாயகக் குடியரசை நிறுவிய தோழர் நஜிபுல்லாவை கொடூரமான முறையில் படுகொலை செய்தார்கள்; தாங்கள் விதிக்கும் சட்ட திட்டங்களைப் பின்பற்றாதவர்களை இஸ்லாத்தின் எதிரிகள் என்று கூறி ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களை துடிதுடிக்கக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவால் பால் வார்க்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தோடு இணைந்து, ஆப்கனில் பல்லாண்டுகாலம் மனிதகுலமே வெறுத்து ஒதுக்கக்கூடிய கொடுங்கோல் ஆட்சியை நடத்தினார்கள். புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், தான் வளர்த்த இந்தப் பாம்புகளை பிடிக்காமல் போய்விட்டது அமெரிக்காவுக்கு. ஆப்கனில் ஜனநாயகத்தை மீட்கிறோம் என்ற பெயரில் அந்நாட்டையே அழித்தொழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆப்கனின் எல்லையிலிருந்து பாகிஸ்தானின் எல்லைக்கு பெருவாரியாக இடம்பெயர்ந்தார்கள் தலிபான்கள்.
* * *
வசிரிஸ்தானும் ஸ்வாட் பள்ளத்தாக்கும் தலிபான்களின் கொலைக்களங்களாக மாறின. இஸ்லாத்தின் பெயரால், இஸ்லாத்திற்கே நேர் எதிராக, திருக்குர்-ஆனுக்கு நேர் முரணாக, நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு எதிராக ஷரியத் சட்டம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள். பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கினார்கள். அவர்களது கல்வியைப் பறித்தார்கள். நானூறுக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களை தரைமட்டமாக்கினார்கள். 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் கல்வியை நாசமாக்கினார்கள். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இதைத் தடுப்பதற்கு மாறாக மவுனம் காத்தார்கள். தனது மக்களை அமெரிக்கா தாக்கினாலும், தலிபான்கள் தாக்கினாலும் தங்களது நாற்காலியை பாதுகாத்துக் கொள்ள வேடிக்கை பார்ப்பது மட்டுமே கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் வாடிக்கையாக இருந்திருக்கிறது.
* * *
கொடியவர்களை எதிர்த்து வீரச் சமர்புரிந்த மக்கள், அரசு அதிகாரிகள், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் என வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்துவிட்ட தலிபான்கள், பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கும் மலாலாவின் உயிரையும் பறிக்கத் திட்டமிட்டனர். 2012 அக்டோபர் 9.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவின் தலையிலும் கழுத்திலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. வெள்ளை நிறச்சீருடை ரத்தத்தால் நனைந்தது. மலாலாவின் தோழிகள் ஷாஜியாவையும் கியானத்தையும் குண்டுகள் துளைத்தன. துடிதுடித்து வீழ்ந்த இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மலாலா லண்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மலாலா என்ற சிறுமியின் போர்க்குரலை இப்போது பாகிஸ்தான் தேசமே எழுப்பிக் கொண்டிருக்கிறது!


Malala Yousafzai arrives at special gunshot unit in British hospital

UKThe Pakistani schoolgirl activist shot by the Taliban has every chance of making a good recovery, says official at Queen Elizabeth hospital Link to this video
Malala Yousafzai, the Pakistani schoolgirl shot in the head by the Taliban because she campaigned for the right to be educated, arrived in the UK on Monday to be cared for at Birmingham's Queen Elizabeth hospital.
"Doctors ... believe she has a chance of making a good recovery on every level," said Dr Dave Rosser, the hospital's medical director, adding her treatment and rehabilitation could take months. He told reporters she had not yet been assessed by British medics but said she would not have been brought to the UK at all if her chances recovery were not good.
Six days after a gunman clambered into the back of a van full of her classmates and shot her from point blank range, the 14-year-old landed at Birmingham airport after flying by on a special air ambulance from Pakistan. Malala travelled to the UK on her own, but her family may follow later.
The Queen Elizabeth hospital is also home to the Royal Centre for Defence Medicine, the primary receiving unit for military casualties returned from overseas.
"Malala's bravery in standing up for the right of all young girls in Pakistan to an education is an example to us all," said the foreign secretary, William Hague.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக