செவ்வாய், 30 அக்டோபர், 2012

சங்கர்ராமன் கொலை: பத்மா மனுவாபஸ்

புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கரராமன் மனைவி பத்மா 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒரு மனுவில் வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் எனவும், 2வது மனுவில் வழக்கில் அப்ரூவராக மாறியிருந்த ரவி சுப்ரமணியன் பிறழ் சாட்சி அளித்துள்ளதால் அவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இம்மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி பத்மா, தனது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை நவம்பர் 5ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக