வெள்ளி, 19 அக்டோபர், 2012

சோனியா குடும்பத்தின் தூக்கத்தைக் கெடுத்த கெம்கா 'அந்தர் பல்டி'

சண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நில 'கொள்ளை' புகார்களை விசாரிக்க உத்தரவிட்டு அதனால் டிரான்ஸ்பர் ஆர்டர் பெற்ற ஹரியான ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
தாம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டதற்கு, வத்ராவின் நில டீலிங்குகளை விசாரிக்கத் தொடங்கியதே காரணம் என்று கூறிக் கொண்டு தொலைக்காட்சிகளில் பேட்டிக் கொடுத்து வந்தார் அசோக் கெம்கா. அர்விந்த் கெஜ்ரிவாலை விட அதிரடி ஹீரோவாக வலம் வந்த அசோக் கெம்கா ஓரிருநாட்களிலே அந்தர் பல்டி அடித்துவிட்டார்.

ஹரியானா மாநில தலைமைச் செயலருடன் நேற்று நீண்ட.....நேரம் அசோக் கெம்சா ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெம்கா, மாநில அரசின் டிரான்ஸ்பர் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி செய்தியாளர்களை வாயடைக்க வைத்துவிட்டார் மனிதர்!
ஏற்கெனவே பதவி வகித்து வந்த பொறுப்பைவிட 'உயர் பதவி' க்கு கெம்கா மாற்றப்பட்டிருக்கிறாராம்.... இதுவும் கூட ஒருவகையில் வாயடைக்கிற வேலைதானே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக