செவ்வாய், 23 அக்டோபர், 2012

அழகிரி , ஸ்டாலின் மதுரையில் சந்திப்பு..ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லவேண்டும்

மதுரையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திருச்சியில் இருந்து காரில் மதுரை வந்தார். இங்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அவருடன் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் அம்பரீஸ், முன்னாள் அமைச்சர் நேரு ஆகியோரும் உடன் இருந்தனர்.சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:உங்கள் இருவரின் சந்திப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திப்பில் முக்கியமாக எதுவும் உண்டா?அண்ணனை பார்க்க தம்பி வந்தேன். பார்த்து பேசினேன். முக்கியத்துவம் எதுவும் இல்லை.தி.மு.க. முன்னணியினர் மீது தமிழக அரசு தொடர்ந்து வழக்கு போட்டு கைது செய்கிறதே? ஜெயலலிதா அரசு தி.மு.க. முன்னோடிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது. தி.மு.க.வினர் மீது ஆதாரம் இல்லாமல் பொய் புகார் கொடுத்தா லும் விசாரணையின்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அதிமுகவினர் மீது ஆதாரத்தோடு புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பித்துரை மீது நீதிமன்ற உத்தரவின்படி, நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவரை போலீசார் அழைத்து விசாரணை கூட நடத்தவில்லை. திமுகவினருக்கு ஒரு நீதி, அதிமுகவினருக்கு ஒரு நீதியா?சென்னை கொளத்தூர் தொகுதியில் குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான 8 ஏக்கர் குளத்தை ஆளும் கட்சியினர் துணையோடு மண்ணை போட்டு மூடி ஆக்கிரமித்துள்ளனர். அது குறித்து 4 மாதத்திற்கு முன் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என்றார்.  இந்த அண்ணன் தம்பிகள் நேருக்கு நேர் சந்தித்து பேசுமளவு அன்பும் பண்பும் வரப்பெற்றமைக்கு உண்மையில்  ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லவேண்டும்  ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக