வியாழன், 25 அக்டோபர், 2012

ஏ.ஆர்.முருகதாஸ்: உதவி இயக்குனராக பல சிரமங்களை அனுபவித்திருக்கிறேன்,

ரொம்ப சிரமப்பட்டோம்! துப்பாக்கி பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ;துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க பம்பாய் நகரில் நடந்தது. இது குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் இயக்குவதாக இருந்தேன். கஜினி ரீமேக்கிற்கு பிறகு எந்த படத்தையும் ரீமேக் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் இந்தியில் நேரடி படமாக இது இருக்கும் என்றும் நான் நினைத்தேன். 
அந்த சமயத்தில் தான் விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகர் என்னை அழைத்து, விஜய்க்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் தான் விஜய்யை வைத்து தமிழில் இயக்கிவிட்டு அதன் பிறகு இந்தியில் இயக்கலாம் என்று முடிவெடுத்தேன். 
இந்தியில் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால், படத்தின் கதை பம்பாய் நகரில் நடப்பது போல அமைத்திருந்தேன். ஆதனால் திடீரென அந்த கதைக் களத்தை சென்னைக்கு மாற்ற எனக்கு விருப்பமில்லை. அதனால் அந்தக் கதையை அப்படியே எடுத்திருக்கிறேன். துப்பாக்கி படத்தின் இண்டோர் காட்சிகளைக் கூட பம்பாய் நகரில் தான் படமாக்கினோம். வீட்டுக்குள் ஒரு சின்ன ஷாட்டாக இருந்தாலும் கூட அதை அங்கேயே படமாக்கினோம். அதற்காக ரொம்ப சிரமப்பட்டோம்.  
தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றுவதில் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. அது தானாகவே அமைந்ததுவிட்டது. நான் உதவி இயக்குனராக இருக்கும் போது பல சிரமங்களை அனுபவித்திருக்கிறேன், அதனால் தான் என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு அதிக முக்கியதுவம் தருகிறேன். அவர்களில் ஒருவனாகவே என்னை பார்க்கிறேன் என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக