வெள்ளி, 26 அக்டோபர், 2012

மீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது!


குமுதம் தொடரும் அநாகரீகம் ;என்னுடைய டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்டுள்ளது. இதோ என் செப்டம்பர் 17ந்தேதி பதிவில் முதல் பாரா!;டி.எஸ்.பாலையாசதி லீலாவதி’(1936) எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள் அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ’சதிலீலாவதி’ தான்.;இன்று கடைக்கு வந்திருக்கும் 31-10-2012 தேதியிட்ட குமுதத்தில் சுனில் கேள்வி  பதிலில் கீழ்கண்டவாறு டி.எஸ் பாலையா நடித்த முதல் படம் எது?

சதி லீலாவதி தான் அவர் நடித்த முதல் படம்.டி.எஸ்.பாலையாவிற்கு மட்டுமல்ல.எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, எம்.கே.ராதா ஆகியோருக்கும் சதிலீலாவதி தான் முதல் படம்.

சுந்தர ராமசாமி சொல்வார்.
காண்டாமிருகத்தை ஈர்க்குச்சியால் காயப்படுத்த முடியாது.
இந்த வார்த்தைகள் தான் இங்கே நானும் வேதனையோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.முரட்டுத்தோல்!என்ன ஒரு சுரணையற்ற தன்மை.
காண்டாமிருகம் சைவம் தான்.ஆனா ஆளக்கொன்னுடும்!

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற தைரியம் தான் குமுதம் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளக்காரணம்.

என்ன ஒரு பூர்ஷ்வாத்தனம். என்ன ஒரு பேட்டை ரௌடித்தனம்.



..... Factual errors குமுதத்தில் வருவது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன்.

சென்ற வார குமுதம் (24.10.2012 தேதி) பேசும் படம் பகுதியில் சிவாஜி,சாவித்திரி,ஜெமினி.சந்திரபாபு,ஜெயல்லிதா,சந்தியா,
கண்ணதாசன்,ஏ.எல்.எஸ்,
சின்ன அண்ணாமலை,ராஜசுலோசனா ஆகியோரை உள்ளடக்கிய புகைப்படம் 1973ல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முந்தைய புகைப்படம் அது! எந்த வருடம் என்று சொல்லமுடியாவிட்டாலும் அந்த படம் 1973க்கு ஐந்தாறு வருடங்களுக்கு முந்தையது.

ஜெமினிகணேசனும் சாவித்திரியும் 1973ல் எல்லாம் சேர்ந்திருக்கவில்லை.
அவர்கள் 1969ல் பிரிந்து விட்டார்கள்.

சிவாஜி ,நெஞ்சிருக்கும் வரை (1967), அல்லதுகலாட்டாகல்யாணம்(1968)நடித்துக்கொண்டிருந்த காலமாயிருக்க வாய்ப்பு உண்டு.சத்தியமாக வசந்தமாளிகை(1972) நடித்து முடித்த, எங்கள் தங்கராஜா(1973) காலத்தை ச்சேர்ந்த சிவாஜி இந்தப்புகைப்படத்தில் இல்லவே இல்லை! அப்போதெல்லாம் காது வரை கிருதா இருக்கும்!

சந்திரபாபு இறந்த தினம் 08-03-1974. புகைப்படத்தில் ’தட்டுங்கள் திறக்கப்படும்’(1966)நடித்துக்களைத்த சலிப்பு த்தான் தெரிகிறது.சந்தியா எப்போது இறந்தார் என்று தெரிந்தால் 1973ல் இந்தப்புகைப்படத்தில் அவரது ஆவி தான் நின்றிருக்கமுடியும். ஆனந்த விகடனில் ப.திருமாவேலன் எழுதியுள்ள் விஷயம்.
ஜெயலலிதா தான் கருணாநிதிக்கு மரியாதை கொடுப்பதில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் ரொம்ப மரியாதை கொடுத்தார் என்ற அர்த்தத்தில் இப்போது அடிக்கடி சொல்லப்படுகிறது.
ஆனால் மேடையில் எம்.ஜி.ஆர் எப்போதும் ”கருணாநிதி” என்று பெயர் சொல்லி தாக்கித்தான் பேசிக்கொண்டிருந்தார். சட்டசபையில் கருணாநிதியைபி.ஹெச்.பாண்டியன் “ நீ ஒரு கொலைகாரன்” என்று ஏக வசனத்தில் பேசிய போதும்,கருணாநிதியை  சட்டசபையில் பொன்னையன் அடிக்கவே பாய்ந்தபோதும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்கவே இல்லை.
ஆண்டவனே என்று எம்.ஜி.ஆர் கருணாநிதியை மட்டுமல்ல, திருச்சி லோகநாகனின் மாமியார் சி.டி.ராஜகாந்தத்தைக்கூடத்தான் விளித்துப் பேசுவார்!
அவரோடு 1940களில்  அறிமுகமான பலரையும் எம்.ஜி.ஆர் உரையாடும்போது ’ஆண்டவனே’ என்று தான் விளிப்பார்.

இன்று ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல,எம்.ஜி.ஆருக்கும் அன்று மிக நன்றாகத் தெரியும். ’கருணாநிதி மீதான கடும்எதிர்ப்பு அரசியல்’ மட்டுமே தான் அதிமுகவின் மூலதனம் என்பது.

இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது! என்ன செய்ய? What you don't know can't hurt you! Ignorance is Bliss!


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக