ஞாயிறு, 21 அக்டோபர், 2012

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறை - தீவைப்பு

 Pakistan Church Attack Details

The Global Lane has learned more about the recent attack against Christians in Mardan, Pakistan.
பாகிஸ்தானில் மைனாரிட்டியாக வகிக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கராச்சியில் கிறிஸ்தவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கராச்சி அருகேயுள்ள ஈசா நக்ரி என்ற இடத்தில் மின்சார வெட்டை கண்டித்து போராட்டம் நடந்தது. அப்போது பழைய காஜி கேம்ப் பகுதியில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தின் மீது ஒரு கும்பல் தாக்கியது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மீது போலீசார் மதஅவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ஈசா நக்ரியில் உள்ள மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை அடித்து நொறுக்கியது. ஆயுதம் தாங்கி வெறியுடன் அக்கும்பல் அங்கு வந்தது.

அப்போது தேவாலயம் பூட்டப்பட்டிருந்தது. இருந்தாலும் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள்களை தரையில் வீசி எறிந்தனர். அங்கு இருந்த ரூ. 40 ஆயிரம் நன்கொடை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை இப்பகுதியில் 6 கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்களும், கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. இவற்றில் சில தேவாலயங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.
இவை கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஈசா நக்ரி பகுதியில் உள்ளது. எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் அரசிடம் கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக