செவ்வாய், 30 அக்டோபர், 2012

மழை... மக்கள் ஸ்தம்பிப்பு.. போக்குவரத்து சீர்குலைந்தது

 Heavy Rain Lashes Chennai Its Suburbs சென்னை முழுவதும் செம மழை... மக்கள் ஸ்தம்பிப்பு.. போக்குவரத்து சீர்குலைந்தது

சென்னை: புயல் சின்னம் காரணமாக தலைநகர் சென்னை முழுவதும் கன மழை கொட்டி வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், புயலாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை நகரின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளான மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இதேபோல நகரின் உட்பகுதியிலும் மழை பெய்கிறது. புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தபடி உள்ளது.
இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ மணிகள் காலையிலேயே டிவி முன் உட்கார்ந்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்வோர்தான் வெளியில் எப்படிப் போவது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர்.http://tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக