செவ்வாய், 23 அக்டோபர், 2012

தம்பிதுரை மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஸ்டாலின் கேள்வி

மதுரை:""அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை மீது, நில அபகரிப்பு புகாரில், தமிழக அரசு இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியை, ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகன் சபரீஷ் நேற்று சந்தித்தார்.
பின், ஸ்டாலின் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மீது, அ.தி.மு.க., அரசு தொடர்ந்து வழக்கு பதிவு செய்கிறது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக, தி.மு.க., சந்திக்கும்.அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை மீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.       உங்களுக்கு உண்மையாகவே அவருக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என்றால் திமுகவிற்கு இழுத்துவிடுங்கள்.

சந்திப்பு ஏன்:
மத்திய அமைச்சர் அழகிரி, மகன் தயாநிதியை கிரானைட் மோசடி வழக்கில் போலீசார் தேடுகின்றனர். இதுகுறித்து, குடும்பத்தில் இருந்து, யாரும் விசாரிக்கவில்லை என, அழகிரி, நெருக்கமானவர்களிடம் கூறிவந்தார். இதனால், அக்.,9ல் அவரது தாயார் தயாளு, மதுரை வந்து சில நாட்கள் தங்கியிருந்தார். இந்நிலையில், அழகிரி மற்றும் குடும்பத்தினரை, ஸ்டாலின் சந்தித்தார்.திருச்சி சிறையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை சந்தித்து விட்டு, நேருவுடன் மதுரை வந்த ஸ்டாலின், மாலை 5:10 மணிக்கு, சத்யசாய் நகர் அழகிரி வீட்டிற்கு சென்றார். கட்சியினர் யாரும் வரக்கூடாது என, அழகிரி, ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் வருகைக்காக, விக்கிரமங்கலம் தோப்பில் இருந்த அழகிரி, ஒரு மணி நேரத்துக்கு முன் தான் வீட்டுக்கு வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக