செவ்வாய், 9 அக்டோபர், 2012

பாலாவின் லண்டன் விசா ரிஜெக்ட்! புலன்பெயர்களால் வந்த வினை

பாலாவின் ‘பரதேசி’ லண்டன் ஆடியோ ரிலீஸூக்கு விசா ரிஜெக்ட்! “யார் பரதேசி?” சந்தேகம்!!

Viruvirupu 
தற்போது படத்தின் ஆடியோ ரிலீஸை வெளிநாடு ஒன்றில் வைத்தால்தான் படத்துக்கு ஒரு பூஸ்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடியோ ட்ராக்குகளுடன் எல்லோரும் வெளிநாடு பறந்து கொண்டிருக்கிறார்கள்.
பாலாவின் ‘பரதேசி’ படத்தின் ஆடியோ ரிலீஸையும் லண்டனில் வைத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
விசா, ரிஜெக்டட்!

இதனால், திட்டம் எல்லாவற்றையும் மாற்றி, சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் ஆடியோ ரிலீஸை வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
பிரிட்டிஷ் விசா மறுக்கப்பட்டதற்கு அப்பீல் செய்ய முடியும். அதையும் செய்வதாக ஒரு யோசனைவேறு உள்ளதாம். அதற்கு, பிரிட்டிஷ் விசா ஏன் மறுக்கப்பட்டது என்ற காரணம் தெரிய வேண்டும்.
சரி. விசா ரிஜெக்ட் செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?
இப்போதெல்லாம், வெளிநாடுகளில் ஆடியோ ரிலீஸ் செய்யப்படும்போது, ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் சில மேலை நாடுகளில் படத்தின் கதை சுருக்கம் கேட்கப்படுகின்றது. கனடாவுக்கு சீமான் சென்று, அங்கு ஆர்.சி.எம்.பி.-யால் (RCMP – Royal Canadian Mounted Police) கைகளில் விலங்கிடப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர், இந்த விழாக்களில் ஏதாவது புரட்சிகர விவகாரங்கள் உள்ளனவா என்று கனடா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட சில நாடுகள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பார்க்கின்றன.
படத்தின் கதைச் சுருக்கம் கேட்கப்படுவதன் காரணமும் அதுதான்.  பாலாவின் பரதேசி யூனிட்டிடமும் கேட்கப்பட்டது.
பாலாவின் ‘பரதேசி’ படத்தின் கதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, “உஷ். அது ரகசியமுங்க” என்றெல்லாம் சொல்ல முடியாது. பாலா புரொடியூசருக்கு கதை சொல்கிறாரோ, இல்லையோ, பிரிட்டிஷ் விசா அதிகாரிக்கு சொல்ல வேண்டும், விசா தேவையென்றால்!
எமக்கு கிடைத்த தகவலின்படி, அப்படி இவர்கள் எழுதிக் கொடுத்த கதைச்சுருக்கத்தில், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு நாடு பிடிக்க வந்த காலத்து கதையும் உண்டு! அதாவது, செமி பீரியட் பிலிம். அதுதான், ஆடியோ ரிலீஸை பிரிட்டிஷ் மண்ணில் நடத்த விரும்புவதாக காரணம் கூறியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம், பிரிட்டிஷ் தூதரகத்தை சற்றே உஷாராக்கி விட்டது. இவர்கள் பிரிட்டிஷ்காரர்களை பற்றி என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாமல், அனுமதி வழங்க தயக்கம் காட்டியிருக்கிறார்கள். அது ஒருபக்கம் என்றால், மறுபக்கம், படத்தின் டைட்டில் தன் பங்குக்கு இழுத்து விழுத்திவிட்டது.
பிரிட்டிஷ் ஹோம் ஆபீஸில் தமிழ் மொழிபெயர்ப்பு சேவை உள்ளது. அவர்கள் ‘பரதேசி’ என்ற டைட்டிலுக்கு, விலாவாரியாகவே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
‘பரதேசி’ என்ற சொல், பேச்சுத் தமிழில் திட்டுவதற்கு பயன்படுகிறது. ஆனால், அதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. பரம்+தேசி என்பது, வெளி தேசத்தவன். அதாவது வெளிநாட்டவன். இந்த வகையில், “பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்த பரதேசிகள்” என்றும் சொல்லலாம். படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டது அந்த அர்த்தத்தில்தான் என்பது, பிரிட்டிஷ் தூதரகத்தின் சந்தேகம்.
விசா விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு விட்டன.
படம் வரட்டும், பார்க்கலாம், பரதேசிக்கு என்ன அர்த்தம் என்பதை! அநேகமாக பிரிட்டிஷ்காரர்கள் ஊகித்த அர்த்தமாகவே இருக்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக