செவ்வாய், 16 அக்டோபர், 2012

பல்டியோ பல்டி குர்ஷித்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட்ட கெஜ்ரிவால்

 Kejriwal Suspends Delhi Protest Announces Next Expose அக். 17-ல் இன்னொரு 'தலை'யை உருட்டுகிறாராம்!

டெல்லி: அறக்கட்டளை மோசடி தொடர்பாக மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்த கெஜ்ரிவால் என்ன நினைத்தாரோ டெல்லி போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அவர் பதவி விலகும் வரை அவரது சொந்த மக்களவைத் தொகுதியான பரூக்காபாத்தில் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
பல்டி 1:
மாற்றுத்திறனாளிகளின் பெயரில் அறக்கட்டளை நடத்தி நிதி மோசடி செய்தவர் சல்மான் குர்ஷித் என்று கூறி ஆதாரங்களை அள்ளி வீசிவந்தார் கெஜ்ரிவால். இதனால் குர்ஷித்தின் பதவிக்கு வேட்டு வந்துவிடும் நிலை உருவானது. இந்நிலையில் இன்று காலை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், சல்மான் குர்ஷித் பதவி விலகும் வரை போராடுவோம் என்றார். பின்னர் பிற்பகலில் டெல்லியில் நடந்த போராட்டம் கைவிடப்படுகிறது. ஆனால் சல்மான் குர்ஷித்துக்கு எதிரான போராட்டம் தொடருகிறது என்று கூறி அவரது மக்களவைத் தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று போராடுவோம் என்று கூறினார்.
பல்டி 2:

ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய அரசியல் தலைவரைப் பற்றிய தகவல்களை நாளை வெளியிடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதிலும் ஒரு பல்டி அடித்து நாளை மறுநாள்தான் அந்தத் தகவலை வெளியிடப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
போராட்டத்தை அறிவிக்கிறதும் திடீர்னும் முடிக்கிறதும்தானே 'அன்னா ஹசாரேவிடம் கற்றுக் கொண்ட பாடம்..பட்டறிவு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக