செவ்வாய், 2 அக்டோபர், 2012

மீனவர்கள் பாகிஸ்தானில் கைது

பாகிஸ்தான் கடல் பகுதியில், மீன் பிடித்த, இந்தியர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் தங்கள் கடல் எல்லையை மீறி, மீன் பிடித்து கைதாவது வாடிக்கையான விஷயம்.

இந்த வகையில், பாகிஸ்தானிய கடல் எல்லைப்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்கள் 33 பேரை, அந்நாட்டு கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்ற ஐந்து படகுகள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட மீனவர்கள், கராச்சியில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
அந்த மீனவர்கள் நம்ம சீமான் தம்பிக்கு போன் செய்தால் போதும் பாகிஸ்தான்காரனை ஒரு பிடி பிடிச்சிர மாட்டார்? அவரு சூட்டிங்கில் பிசி பரவாயில்ல நெடுமாறன் சைகோ வகையறாக்கள் இருக்கவே இருக்கிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக