சனி, 27 அக்டோபர், 2012

பாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்


பாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது  வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.
என்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

பொதுப் பாலினம் 
  1. ஆண்- Male
  2. பெண்- Female
திருநர் – Transgender
  1. திருநங்கை – Transwomen
  2. திருநம்பி- Transmen
பால் புதுமையர்- Gender queer
  1. பால் நடுநர் – Androgyny
  2. முழுனர் – pangender
  3. இருனர்- Bigender
  4. திரினர்- Trigender
  5. பாலிலி –  Agender
  6. திருனடுனர் – Neutrois
  7. மறுமாறிகள் – Retransitioners
  8. தோற்ற பாலினத்தவர் – Appearance gendered
  9. முரண் திருநர் – Transbinary
  10. பிறர்பால் உடையணியும் திருநர் – Transcrossdressers
  11. இருமை நகர்வு – Binary’s butch
  12. எதிர் பாலிலி – Fancy
  13. இருமைக்குரியோர் – Epicene
  14. இடைபாலினம் –  Intergender
  15. மாறுபக்க ஆணியல் – Transmasculine
  16. மாறுபக்க பெண்ணியல் – Transfeminine
  17. அரைபெண்டிர் – Demi girl
  18. அரையாடவர் – Demi guy
  19. நம்பி ஈர்ப்பனள் – Girl fags
  20. நங்கை ஈர்பனன் – Guy dykes
  21. பால் நகர்வோர் – Genderfluid
  22. ஆணியல் பெண் – Tomboy
  23. பெண்ணன் – Sissy
  24. இருமையின்மை ஆணியல் – Non binary Butch
  25. இருமையின்மை பெண்ணியல் – Non binary femme
  26. பிறர்பால் உடை அணிபவர் – Cross Dresser
இந்தப் பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை.
எதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.
0
ஆழம் இதழில் வெளியான கோபி ஷங்கரின் கட்டுரைகள் :
  1. ஒரு பால் ஈர்ப்பு உள்ளவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம்!
  2. பிங்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி
‘ஸ்ருஷ்டி’  என்னும் அமைப்பின் நிறுவனர் கோபி ஷங்கர். மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டம், ஸ்ருஷ்டி. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்னைகளை, சமூகப் பார்வையோடு அணுகி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.  http://www.tamilpaper.net/?p=7018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக