ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நடிகை அனன்யா வில்வித்தையில் தங்கம் வென்றார்

திருவனந்தபுரம்: மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் நடிகை அனன்யா தங்கம் வென்றுள்ளார்.  தமிழில் நாடோடிகள் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனன்யா. 9ம் வகுப்பு முதல் வில்வித்தை போட்டியில் பங்கேற்க தொடங்கிய இவர் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் போது மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  சினிமா நடிகையான பின்னர் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்வதை அனன்யா நிறுத்தி இருந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சியில் நேற்று நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் அவர் கலந்து கொண்டு காம்பவுண்ட் பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனன்யா தகுதி பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக