வெள்ளி, 26 அக்டோபர், 2012

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராஜினாமா

 Sm Krishna Resigns From Cabinet
டெல்லி: மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கட்சிப் பணிக்காக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும்விதமாக எஸ்.எம். கிருஷ்ணா இன்று தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இதேபோல் அறக்கட்டளை மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள சட்ட அமைசுசர் சல்மான் குர்ஷித்தின் பதவிக்கும் வேட்டு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது http://tamil.oneindia.in/news/2012/10/26/india-sm-krishna-resigns-from-cabinet-163719.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக