திங்கள், 22 அக்டோபர், 2012

காதலர்களுக்கு உதவிய மாணவி பயத்தினால் தற்கொலை

கிருஷ்ணகிரி: தன்னுடன் படித்து வந்த 2 மாணவிகளும், தங்களது காதலர்களுடன் வீட்டை விட்டு ஓடிப் போக உதவி புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாலிடெக்னிக் மாணவி, உறவினர்கள் மிரட்டியதாலும், போலீஸுக்குப் போகப் போவதாக கூறியதாலும் பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலிகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா. 17 வயதான இவர் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். அதே பாலிடெக்னிக்கில் படித்து வந்த சூளகிரியைச் சேர்ந்த 2 மாணவிகள் இவருடன் நட்பாகப் பழகினர். இந்த இரண்டு மாணவிகளும் இருவரைக் காதலித்து வந்தனர். இந்தக் காதலுக்கு பரிமளா உதவியாக இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு மாணவிகளும் தத்தமது காதலர்களுடன் ஓடிப் போய் விட்டனர். இதனால் இரு மாணவிகளின் வீட்டாரும் கொதிப்படைந்தனர். அனைவரும் பரிமளாவை நெருக்க ஆரம்பித்தனர். எங்கே போயுள்ளனர் என்று கேட்டு விசாரித்துள்ளனர். மேலும் போலீஸில் புகார் சொல்ல்ப போவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா, தனக்கு சத்தியமாக எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இருந்தாலும் உறவினர்கள் நம்பவில்லை.

இந்த நிலையில் பரிமளாவின் தாயாரும், மகளைக் கண்டித்துள்ளார். இதனால் பலமுனை நெருக்குதலுக்குள்ளானதால் மனம் உடைந்து போனார் பரிமளா. இதையடுத்து அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக