வெள்ளி, 5 அக்டோபர், 2012

Bangalore கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு ஆட்கள் வந்து குவிகின்றனர்!


Viruvirupu
காவிரி பிரச்சனைக்காக கர்நாடகத்தில் நாளை 6-ம் தேதிதான், மாநிலம் தழுவிய பந்த் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பந்தின்போது, அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்கலாம் என்ற பதட்டம் உள்ளது.
இந்நிலையில் இன்று, பெங்களூருவில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் சார்பில் பிரமாண்டப் பேரணி நடக்கவுள்ளது.
இந்தப் பேரணி, பெங்களூருவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் போன்ற காவிரி பாசனத்துடன் தொடர்புடைய இடங்களில் இருந்து இந்த அமைப்பினர் இன்று பெங்களூருவில் குவிந்து வருகின்றனர்.
பசவனகுடி நேஷனல் காலேஜ் மைதானத்தில் இருந்து இந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு ராஜ்பவன் செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பேரணி காரணமாக பெங்களூரில் பதற்றம் நிலவுகிறது. போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக