புதன், 24 அக்டோபர், 2012

உருக்கமான கடிதம்! 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி தற்கொலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பெ.நா.பாளையம்: கோவையில் விஷ பிஸ்கட் கொடுத்து 7 வயது மகனை கொன்ற காதல் தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை கவுண்டம்பாளையம் வைகோ நகரை சேர்ந்தவர் பரமசிவம்(36). கால்டாக்சி டிரைவர். மனைவி கோமளவல்லி(26). தனியார் நிறுவன ஊழியர். மகன் நவீன்குமார்(7) அருகில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன். ஊட்டி அடுத்த புலிசேரியை சேர்ந்த இந்த தம்பதி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கோவை வந்த இவர்களுக்குள் குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடன் தொல்லையும் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதிக்குள் மீண்டும் சண்டை ஏற்படவே அருகே வசித்து வரும் கோமளவல்லியின் அண்ணன் குமார் இருவரையும் சமாதானப்படுத்தி சென்றுள்ளார்.

நேற்று பரமசிவத்தின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர்  ஜன்னல் வழியாக பார்த்தபோது ஹாலில் பரமசிவம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். கோமளவல்லியின் அண்ணன் குமார் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தாய், மகன் இருவரது சடலமும் நடுஹாலில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அருகே குமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். மகனுக்கு விஷம் தடவிய பிஸ்கட்டை கொடுத்து கொலை செய்த பின், கோமளவல்லி சமையலறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியின் சடலத்தை இறக்கி மகன் அருகே படுக்க வைத்த பின் தங்கள் தற்கொலைக்கான காரணம் வேறு யாருமில்லை என எழுதி வைத்து விட்டு பரமசிவமும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. உருக்கமான கடிதம் சிக்கியது: பரமசிவம் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசில் சிக்கியது. அதில், ‘எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நாங்களாக எடுத்த முடிவு இது. உன்னிடம்(கோமளவல்லி)  முதன்முதலாக காதலை சொன்னது நான் தான்.  நீ இறந்த பின் நான் உயிரோடு இருக்க முடியாது. என்னை பிரிந்து நீயும் இருக்க முடியாது. நான் தொடங்கி  வைத்ததை நானே முடிக்கிறேன்‘ என எழுதப்பட்டிருந்தது. ஆயுதபூஜை நாளில் மகனுடன் தம்பதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக