வியாழன், 4 அக்டோபர், 2012

மானாட மயிலாட 7 First Prize பாபி- ஸ்வர்ணா

மானாட மயிலாட சீசன் 7 பட்டத்தை பாபி - சுவர்ணா ஜோடி வென்றுள்ளது. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசினை சிறப்பு விருந்தினர்கள் டாப்ஸியும், விவேக்கும் வழங்கினார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடும் இந்த ரியாலிட்டி ஷோ 7 சீசன்களை கடந்துள்ளது. சீசன் 7க்கான இறுதிப்போட்டி செப்டம்பர் மாதம் 8ம் மலேசியாவில் நடைபெற்றது. கலா, குஷ்பு, நமீதா நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் நான்கு ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக நடனமாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய பாபி - சுவர்ணா ஜோடி முதல்பரிசைத் தட்டிச்சென்றனர். இரண்டாவது இடத்தை சுஜித் - அங்கிதா ஜோடியும் மூன்றாவது இடத்தை புவியரசு - அனுஷா ஜோடி தட்டிச்சென்றனர்.

மலேசியத் தமிழர்களை மகிழ்விப்பதற்காக இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் ஜெயம் ரவி, விவேக், நடிகை டாப்ஸி பங்கேற்று போட்டியாளர்களுக்கு பரிசளித்தனர். முதல்பரிசை பெற்ற ஜோடிக்கு டாப்ஸியும், விவேக்கும் 10 லட்சம் ரூபாய் பரிசுக்கான செக்கினை வழங்கினார்கள்.
சிறப்பாக நடனம் அமைத்து சிறந்த நடன இயக்குநருக்கான முதல் பரிசை வென்ற ஆண்டனிக்கு 1,50000 ரூபாய் பரிசினை நடிகர் ஜெயம் ரவி வழங்கினர். நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்ற நமீதா மாம்பழக்கலர் புடவை கட்டி மல்கோவா மாம்பழம் போல நடனமாடினார். நடனம் முடிந்த உடன் ரசிகர்களை நோக்கி பல பறக்கும் முத்தங்களை பறக்கவிட்டுச் சென்றது நிகழ்ச்சியின் ஹைலைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக