திங்கள், 15 அக்டோபர், 2012

மணி சங்கர் ஐயர்: 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது: மணி சங்கர் ஐயர்<இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி

ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் கூறினார்.Rock-a-bye: Mani Shankar Aiyar and wife Suneet steal a few Lutyens momentsஉதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45 வருடமாகின்றது. இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள். அதுதான் கட்சியில் இருக்கும் முக்கியப் பிரச்னை.நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்தை முடக்குவதால் பிரச்னைகளைப் பேச முடிவதில்லை. பேசினால்தான் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அதனை முடக்குவதால் பலன் ஏதும் இல்லை. கேஜ்ரிவால் தற்போது நடத்திக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க நாடகமே.
அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்.இப்போது ராகுல் அரசியலுக்கு வருவது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா, ராஜீவ் ஆகியோர் அரசியலுக்கு வந்தபோது யாருக்கும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து தெரியாது. அதேபோல் ராகுலும் வந்தால் சிறப்பாக வழிநடத்துவார். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக