திங்கள், 22 அக்டோபர், 2012

வருகிறார் வடிவேலு இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2.

சென்னை: தனது அஞ்ஞாதவாசத்திலிருந்து வெளியில் வருகிறார் வடிவேலு. இனி வடிவேலு நடிக்கவே மாட்டார் என்று வந்த செய்திகளைப் பொய்யாக்கும் விதத்தில், அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
அந்தப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி-2. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை சத்தமில்லாமல் முடித்துவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.
ஏற்கெனவே இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்புதேவன் வடிவேலுவுடன் பேசி வந்தார். அரசியல் காரணங்களால் ஒதுக்கப்பட்டு அல்லது ஒதுங்கியிருந்தாலும், இந்தப் படத்துக்கான வேலைகள் மட்டும் தொடர்ந்து நடந்து வந்தனவாம்.
விரைவில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சிம்புதேவன் கூறுகையில், "ஆமாம்.. வடிவேலுவின் மறுபிரவேசம் இம்சை அரசனின் இரண்டாம் பாகம் மூலம் நடக்கவிருக்கிறது. படத்துக்கான திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. ரசித்து ரசித்து சிரிக்கும் ஒரு நல்ல படமாக இம்சை அரசன் 2-ம் பாகம் அமையும்," என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக