புதன், 3 அக்டோபர், 2012

சோனியாவுக்கு 1,880 கோடி செலவிடப்பட்டதா? நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்


அகமதாபாத் :காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாடு பயணத்துக்காக ரூ.1,880 கோடி செலவு செய்திருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருப்பதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த வகையில் மத்திய அரசு ரூ.1,880 கோடி செலவு செய்திருப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த வாரம் பொதுக்கூட்டம் ஒன்றில் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக இந்தி பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தியை ஆதாரமாக காட்டினார். இந்த செய்தி பொய் என்றால் அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயாராக  இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடிக்கு மூளை கெட்டு விட்டதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மோடிக்கு தாழ்வு மனப்பான்மை.  சோனியாவின் வெளிநாட்டு பயணத்துக்கு மோடிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சோனியாவின் செலவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய அரசு செலவு செய்யவில்லைÕÕ என்றார். சோனியாவின் வெளிநாட்டு செலவு குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதற்கு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக