வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அன்னா குழு இழுபறி கூத்தாட்டம் ?

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் கொண்டுவருவதற்காக அன்னா ஹசாரே போராடி வருகிறார். ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லி ஜந்தர்மந்தரில் நடந்த போராட்டத்தின்போது, அவரது ஆதரவாளர்கள் அரசியல் கட்சி தொடங்க முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும் அன்னா ஹசாரே குழு அரசியல் கட்சி தொடங்குவதில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இந்த நிலையில், தனது குழுவினர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும், தனது படத்தையோ, பெயரையோ அவர்கள் தொடங்கும் கட்சிக்கு பயன்படுத்தக்கூடாது என அன்னா ஹசாரே நேற்று தடை விதித்து அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இழுபறி இரண்டுபட்டு கூத்தாட்டம் 


 இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்னா ஹசாரேவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகுந்த வேதனை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக