செவ்வாய், 25 செப்டம்பர், 2012

Pakistan இளம் பெண்கள் மூலம் டில்லிக்கு அனுப்பும் கள்ள நோட்டு!

பாக். உளவுத்துறை கவர்ச்சிகர இளம் பெண்கள் மூலம் டில்லிக்கு அனுப்பும் கள்ள நோட்டு!

Viruvirupu,
இந்தியாவுக்குள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பைனான்ஸ் பண்ணுவதற்கும், இந்திய பொருளாதாரத்தை குலைப்பதற்கும் பாக். உளவுத்துறை நீண்ட காலமாகவே இந்திய கரன்சியை போலியாக அச்சிட்டு, புழக்கத்தில் விடுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.
சமீபத்தில் டில்லி வருவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவரிடம், பெருந்தொகை இந்திய கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
பாக். உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யால் அனுப்பப்பட்ட பெண் ஒருவர், நேபாள தலைநகர் காத்மன்டு ஏர்போர்ட்டில் டில்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு வந்தபோதே அவர், பெருமளவு இந்திய ரூபா கள்ள நோட்டுக்களுடன் சிக்கியிருந்தார்.
குறிப்பிட்ட பெண் நேபாளத்தில் இருந்து தமது பயணத்தை தொடங்கவில்லை என்று தெரிகிறது. வியட்நாமில் இருந்து தமது பயணத்தை ஆரம்பித்த இந்தப் பெண், காத்மன்டு ஊடாக டில்லி வர முயன்றிருக்கிறார். நேபாள போலீஸால் கைது செய்யப்பட்ட அவரிடம், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரியவருகிறது.

தமக்கு இந்த பணம் யாருடையது என்பதோ, யாருக்கு போய் சேருகின்றது என்பதோ ரெியாது என்று கூறிய அந்தப் பெண், டில்லி விமான நிலையத்தில் வைத்து பணத்தை பெற்றுக்கொள்ள ஒருவர் வருவார். அவரிடம் பணத்தை கொடுத்து விடவும் என்பதே தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் என்று கூறியிருக்கிறார். அதாவது இந்தப் பெண், வெறும் கூரியர்.
உளவு வட்டாரத் தகவல்களின்படி, இந்தியாவுக்கு எதிரான பாக். உளவுத்துறையின் நடவடிக்கைகள், தாய்லாந்து, நேபாளம், பங்களாதேஷ் ஆகியவற்றில்தான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வந்தன. இந்த இடங்களில் இந்திய உளவு ஏஜென்சிகளும் கண்காணிப்பை மேற்கொள்ளவே, புதிதாக வியட்நாமில் ஒரு ஆபரேஷனை தொடங்கியுள்ளது ஐ.எஸ்.ஐ.
இந்தியாவுக்குள் கள்ள நோட்டுக்களை கொண்டுபோய் சேர்ப்பதற்கு இவர்கள் வெளிநாட்டு பிரஜைகளையே பயன்படுத்துகிறார்கள். அதிலும் பெரும்பாலும் கவர்ச்சிகரமான ஆசியப் பெண்களாக உள்ளனர் இவர்களது கூரியர்கள்.
இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் இந்த போலி நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், இதில் வந்து சேரும் பணம் பெரும்பாலும், இந்தியாவுக்குள் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், மற்றும் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படும் தீவிரவாத அமைப்பினரின் செலவுகளுக்கே பயன்படுவதாக தெரிகிறது.
டில்லி ஏர்போர்ட்டுக்கு வெளிநாட்டு பெண் கூரியர்களால் வந்து சேரும் பணம், ஏர்ப்போர்ட்டில் வைத்தே கைமாறுகிறது. அதன்பின், வெவ்வேறு வழிகளில் காஷ்மீர் வேலி (Kashmir Valley) வரை செல்கிறது.
கடந்த ஆண்டு, பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களில் வந்துகொண்டிருந்த வெளிநாட்டு பெண் கூரியர்கள், தற்போது டில்லி ஊடாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று கூறுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக