புதன், 5 செப்டம்பர், 2012

Kareena kapoorரை கலங்க வைத்துள்ள Saif Khan மகள் சாரா

Why Does Kareena Look Worried மும்பை: தனது காதலர் சைப் அலி கானின் மகள் சாரா நடிக்க வந்துவிடுவாரோ என்ற கலக்கத்தில் உள்ளாராம் கரீனா கபூர்.
பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்துவிட்டு தான் தற்போது தம்பதிகளாகவிருக்கின்றனர். சைப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவருக்கு முதல் மனைவி மூலம் சாரா, இப்ராகிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கரீனா சைபை காதலிக்க ஆரம்பித்தபோது சிறுமியாக இருந்த சாரா தற்போது குமரியாகிவிட்டார். அந்த அழகிய குமரி அண்மையில் நடந்த பேஷன்ஷோ ஒன்றில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின. அந்த புகைப்படங்களில் சாரா அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் சாராவுக்கு ஏராளமான படவாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவர் இதுவரை எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருக்கு பட வாய்ப்புகள் வருவது தான் கரீனாவுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. கரீனாவின் இந்த பதட்டத்திற்கு காரணம் இருக்கிறது. சாரா நடிக்க வந்தால் 'கரீனாவின் மகள் ஹீரோயினாகிவிட்டார்' என்று செய்தியாளர்கள் கொட்டை எழுத்தில் தலைப்பைப் போட்டு செய்தி வெளியிட்டுவிடுவார்கள் அல்லவா அந்த பயம் தான் அம்மணிக்கு. பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் தன்னை ஒரு இளம்பெண்ணின் தாயாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக