புதன், 26 செப்டம்பர், 2012

சீனாவின் புதிய விமானம் தாங்கி கப்பல் யுத்தத்துக்கு உதவாது

சீனாவின் முதலாவது விமானம் தாங்கி கப்பல்: என்ன தமாஷ் பண்றேளா?

Viruvirupu.com
சீனா தமது முதலாவது விமானம் தாங்கி கப்பலை (aircraft carrier) கடற்படையில் நேற்று (செவ்வாய்கிழமை) இணைத்துக் கொண்டது. சீனாவில் ‘வளரும் ராணுவ பலத்துக்கு’ இந்த விமானம் தாங்கி கப்பல் முக்கியமானது என்று சீன அரசு அறிவித்துள்ள போதிலும், ராணுவ வட்டாரங்களில் இந்த கப்பல் பற்றி கிண்டலாகவே பேசப்படுகிறது.
“இதில் செலவிட்ட பணம் வேஸ்ட்” என்பதே ராணுவ வட்டாரங்களில் கூறப்படும் காமென்ட்.
முதல் விவகாரம், இந்த புதிய விமானம் தாங்கி கப்பலில் இறக்கி ஏற்றும் ரகத்திலாக விமானங்கள் ஏதும் சீனாவிடம் இல்லை. கப்பல் தயாரான பின்னரே விமானம் வாங்கப் போகிறார்கள். அதுவரை கப்பல் சும்மா பயிற்சிகளில் மட்டுமே ஈடுபடவுள்ளது.
ட்ரயைல் ரன் ஓடும்போது, சும்மா போர் விமானங்களை பொம்மை போல நிறுத்தியிருந்தது. (மேலே போட்டோ பார்க்கவும்)
அடுத்த விவகாரம், “இது சீனாவால் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல்” என சீன அரசு பெருமையாக சொல்லிக் கொண்டாலும், சீனா இந்தக் கப்பலை முதல் பலகையில் இருந்து தயாரிக்கவில்லை.
உக்ரேன் நாட்டு பழைய கப்பல் ஒன்றை வாங்கி, அதன் பேஸில் தமது கப்பலை உருவாக்கியிருக்கிறார்கள் இவர்கள்.
உக்ரேன் கப்பல்கள் வேகம் குறைந்தவை.
சீனா முறைத்துக் கொள்ளும் அயல்நாடான வியட்நாமின் விமானப் படையில், 230 லேன்ட் பேஸ்டு போர் விமானங்கள் உள்ளன. ஏதாவது ஒரு தகராறு ஏற்பட்டால், இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கு சமாதி கட்ட வியட்நாம் விமானங்களால் முடியும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், சீனாவால் தமது முகத்தை எங்கேயும் கொண்டுபோய் வைக்க முடியாது!
சுருக்கமாக சொன்னால், சீனாவின் இந்த புதிய விமானம் தாங்கி கப்பல், யுத்தத்துக்கு உதவாது. அருகிலுள்ள குட்டி நாடுகளை மிரட்டுவதற்கு பயன்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக