திங்கள், 3 செப்டம்பர், 2012

நவ்யா நாயர், மேக்னா நாயுடு,சமீரா ரெட்டி, லட்சுமி மேனன்,ஜனனி அய்யர்

நடிகைகள் சாதி பெயரை பயன்படுத்துவதா? டைரக்டர்கள் எதிர்ப்பு

தமிழ் படங்களில் நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்களுடன் சாதி பெயரையும், இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை. தங்கள் பெயர்களுடன் சாதி பெயரையும் இணைத்தே விளம்பரங்களில் போடவேண்டும் என்று இயக் குனர்களை நிர்ப்பந்திக்கின்றனர். நவ்யா நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர். தற்போது சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் சாதி பெயர்களை தங்கள் பெயர்களுடன் இணைத்துள்ளனர். கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். ஜனனி அய்யர், ‘பாகன்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.


சென்னையில் நடந்த ‘பாகன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசும்போது, நடிகைகள் சாதி பெயரை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என வைத்துள்ளார். நடிகைகள் தங்கள் பெயருடன் சாதி அடையாளத்தை வைப்பதை நான் எதிர்க்கிறேன். சாதி பெயரை தங்கள் பெயர் களுடன் இணைக்ககூடாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக