வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கமலஹாசன் :கற்பிப்பது ஒரு தியாகம்.


செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தைப் பற்றி நடிகர் கமலஹாசன் அளித்த பேட்டியில்” கற்பிப்பது ஒரு தியாகம். அது கற்றவர்களுக்கெல்லாம் இருக்காது. ஒரு சிலருக்கே அது இருக்கும். எனக்கு அந்த தியாக மனப்பான்மை மிகவும் குறைவு. கற்பதில் ஆர்வம் அதிகமாய் இருப்பதனால் நான் கற்றுக்கொடுக்கும் தியாகத்தை செய்யத் தயங்குவேன். 
அதனால் கற்றுக்கொடுப்பவர்கள் மேல் மிகுந்த அன்பும், பாசமும், மரியாதையும் உண்டு. மற்றபடி கற்பிக்கும்போது சற்று தங்கி இருக்க வேண்டிவரும்.
8-ஆம் வகுப்பு ஆசிரியர் 8-ஆம் வகுப்பிலேயே இருப்பார்.கற்றுக்கொண்ட மாணவன் பட்டப்படிப்பு முடித்துவிடுவான். ஆனாலும் ஆசிரியர் என்ற மரியாதை அந்த மாணவனிடம் இருக்கும் அது ஆனால் அந்த தியாகம் வெகு சிலராலேயே செய்யக் கூடியது. அந்த ஆசிரியரும் நினைத்திருந்தால் அந்த மாணவனைவிட பெரிய படிப்பெல்லாம் முன்பே படித்திருக்க முடியும். ஆனாலும் இது போதும் இங்கிருந்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்போம் என்ற பெருந்தன்மை, அமெரிக்காவெல்லாம் வேண்டாம் நான் என் நாட்டிலேயே வேலை செய்கிறேன் என்று சொல்லும் தியாகத்திற்கு சமம்அதனாலேயே போற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள். என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எல்லாம் எனக்கு  கற்றுக் கொடுத்தவர்களினால் ஏற்பட்டது.  புதிய மொபைல் ஃபோன் வாங்கினால் கூட அதிலிருக்கும் டுடோரியல் பார்த்து நான் கற்றுக்கொள்ள மாட்டேன். என் நண்பனோ, என் மகளோ யாரோ ஒருவர் தான் எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 
அந்த நேரத்தில் அவர்கள் வாத்தியார் ஆகிறார்கள். எனவே என்னைப் பொருத்த வரையில் ‘கற்பவனுக்கு எல்லா நாளும் ஆசிரியர் தினம் தான்’ எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக