செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தயாரிப்பாளரை உலுக்கிய கிரண்! நான் தங்கம்ய்யா, சொக்கத் தங்கம்

மம்முட்டி நடித்த ஒரு மலையாளப் படத்தை லைட்டா பட்டி பார்த்து டிங்கரிங் செய்து தமிழுக்கு கொண்டு வருகிறார்கள். இதில் பெரிய தொகையைக் கொடுத்து பழைய கிரணை புதுமையான ஒரு குத்தாட்டத்தில் ஆட வைத்துள்ளனராம். 

கிரணை இந்தப் படத்திற்காக ஆட வேண்டும் என்று தயாரிப்பாளர் அன்புக் கோரிக்கை வைத்தபோது தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறையாக பெரிய சம்பளத்தைக் கேட்டாராம் கிரண்.
என்னங்க இது, இப்படிக் கேட்குறீங்களே, உங்களுக்கு தமிழில் பெரிய பிரேக்கும், ரீ என்ட்ரியும் இந்தப் பாட்டு மூலம் கிடைக்குமே, அதை தவற விடலாமோ என்று கேட்டாராம் தயாரிப்பாளர்.
அதைக் கேட்ட கிரண் சற்றும் மனம் தளராம், எல்லாம் சரிதான். தங்கத்திற்கு என்றைக்காவது மதிப்பு குறையுமா.. கழுத்தில் கிடந்தாலும் சரி, இல்லை பீரோவில் வைத்துப் பூட்டியிருந்தாலும் சரி தங்கம் தங்கம்தானே. நானும் அப்படித்தானே என்று கொஞ்சலாகவும், லாஜிக்காகவும், மேஜிக்காகவும் பேச,
தயாரிப்பாளர் அப்படியே ஸ்வீட் ஷாக்காகி விட்டாராம். பிறகென்ன கிரண் கேட்டதைத் தூக்கிக் கொடுக்க, அட்டகாசமாக வந்து அமர்க்களாக ஆடிக் கொடுத்தாராம் கிரண்.
சரி அதை விடுங்க, படத்தைப் பற்றிப் பார்ப்போம்... அதாவது மம்முட்டி, டாப்ஸி, நதியா போன்றோர் நடித்த படம்தான் டிவின்ஸ். படத்தில் தமிழ்நாட்டுக்கு அறிமுகமான பலரும் இருந்ததால் லேசாக சில காட்சிகளை மட்டும் மாற்றி எடுத்து இப்போது புதுவை மாநகரம் என்ற பெயரில் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளனர். அதுதான் இந்தப் படம். இதில் கிரண் ஆட்டம் போட்டிருக்கிறாராம்....
'தங்கம்மா' கிரண்...ஆட்டமும் ஜொலிக்கும்ல...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக