புதன், 19 செப்டம்பர், 2012

நயன்தாராவா? ஸ்ரேயாவா? சூர்யாவுடன் ஆட்டம் போட


சூர்யா, அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சிங்கம் பட கதையின் தொடர்ச்சியாக சிங்கம் 2-ஐ இயக்கிக்ண்டிருக்கிறார் ஹரி. சிங்கம் 2 -ல் சூர்யா, அனுஷ்கா, ஹன்ஸிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர்.சிங்கம் போலவே மசாலா படமாக உருவாகிக்கொண்டிருக்கும் சிங்கம் 2-ல்  வரும் ஒரு குத்துப் பாட்டிற்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போட திரையுலகின் முன்னணி நடிகைகளுடன் பேசிவருகிறதாம் சிங்கம் 2 யூனிட். சிவகாசி படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாராவிடம் பேசி வருகின்றனராம்.ஒருவேளை நயன்தாரா மறுத்தால் ஸ்ரேயாவிடம் பேசவிருக்கிறதாம் சிங்கம் 2 யூனிட். ஏற்கனவே அனுஷ்கா, ஹன்ஸிகா மோத்வானி என இரண்டு ஹீரோயின்கள் இருக்கும் படத்தில் நயன்தாரா அல்லது ஸ்ரேயா இணையவிருப்பது ரசிகர்களின் கண்ணிற்கு குளிர்ச்சி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக