வியாழன், 6 செப்டம்பர், 2012

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனவெறியை ஜெயலலிதா கிளப்புகிறார்

ஜெயலலிதா முதலில் இலங்கையிலிருந்து கால்பந்து விளையாடுவதற்காக வந்த மாணவர்களை திருப்பி அனுப்பியதாலும், அவர்களை விளையாட அனுமதித்த தமிழக அரசு அதிகாரி ஒருவரை தற்காலிக பணி நீக்கம் செய்ததாலும், அதைப் பார்த்துவிட்டு, இலங்கையில் இருந்து வந்த பக்தர்களையும் அடித்து விரட்டியுள்ளனர்” 
ஈழத் தமிழரை தவிர்த்து, இலங்கையில் வசிக்கும்  இந்திய வம்சாவளி தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?
16 லட்சம் பேர்!
இவர்கள், ஈழத் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இல்லை. சிங்கள மக்களுடன் மத்திய மாகாணத்தில் வசிக்கிறார்கள்!
இலங்கையில் இவர்கள் பொதுவாக இந்தியர்களாகவே கருதப்படுகிறார்கள்! இவர்களில் பெரும்பாலானவர்கள், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இலங்கை சென்றவர்கள்!
தமிழகத்தில் 180 சிங்களவரை தாக்கி இலங்கைக்கு அனுப்பினால்,  சிங்கள மக்கள் மத்தியில் வாழும் 16 லட்சம் இந்தியத் தமிழர்களுக்கு ஏதும் ஆகாது என்று சீமானும், வைகோவும் நம்புவார்களானால்…
….சிங்கள மக்களின் மனிதாபிமானம்  பற்றிய மிக உயர்ந்த அபிப்பிராயம் சீமானுக்கும், வைகோவுக்கும் உள்ளது என்று அர்த்தம்!  
தாக்கப்படவர்களில் ஈழத்தமிழர்களும் அடங்குவர் இது ஜெயலலிதாவின் திட்டமிட்ட சதி 
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக  ஜெயலலிதா இனவெறியை  கிளப்புகிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக