திங்கள், 24 செப்டம்பர், 2012

பொத்தாம் பொதுவாக திராவிட கட்சிகளால் என்று தி.மு. கவை ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கடந்த பத்தாண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்று பொதுப்படையாக கழக ஆட்சியையும் சேர்த்துக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.கழக ஆட்சியில் மின் உற்பத்திக்காக செய்யப்பட்ட திட்டங்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அண்மைக் காலமாக அவர் இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்க்கின்ற முடிவினை எடுத்திருப்பதால் பத்தாண்டுகளில் புதிய மின் திட்டங்களே தொடங்கவில்லை என்கிறார். இருந்தாலும் அவருடைய நினைவிற்காக கழக ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்கள் எவையெவை மேற் கொள்ளப்பட்டன என்ற விவரங்களை அளிக்கக் வை ராமதாஸ் கடமைப்பட்டுள்ளேன்.எண்ணுôர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தி.மு. கழக ஆட்சியில் 8-12-2006இல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. அதன் உற்பத்தி தான் 2013 ஆகஸ்டில் தொடங்கப்படவுள்ளது.<மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஒரு திட்டம் 2-5-2007இல் தொடங்கப்பட்டது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் உற்பத்தி தான் விரைவிலே வரவுள்ளது.வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26-6-2007இல் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் உற்பத்தி மிக விரைவில் வரவுள்ளது.


உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிடிநநாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின்கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007இல் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தான் மீண்டும் தற்போது இந்த ஆட்சியிலே தொடங்கவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்.>006இல் தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012இல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013இல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014இல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் 2011இல் கழக ஆட்சி மாறிய காரணத்தால், பல திட்டங்கள் முறையாக முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால் பயனுக்கு வராமல் உள்ளன. அது மாத்திரமல்ல; 2006ஆம் ஆண்டு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப் பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா, எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு அப்போதே முயற்சிகள் எடுத்திருப்பாரானால், தற்போது மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. தமிடிநநாட்டு மக்கள் அவதிக்கு ஆளாகியும் இருக்க மாட்டார்கள்.எனவே டாக்டர் ராமதாஸ் அவர்கள் பொத்தாம் பொதுவாக திராவிட கட்சிகளால் தமிழகம் என்ன வளர்ச்சி கண்டது என்று தி.மு. கழகத்தையும் சேர்த்துக் குறை சொல்வது நல்லதல்ல. சட்டப் பேரவையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த நண்பர் ஜி.கே. மணி போன்றவர்கள் பேசிய பழைய பேச்சுக்களை எடுத்துப் பார்த்தாலே கழக ஆட்சியில் தமிழகம் என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் என்பதை நடுநிலையாளர்கள் கவனத்திற்கு அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக