புதன், 26 செப்டம்பர், 2012

விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு விஜய் மல்லையாவே கமிஷன் பெற்ற கொடுமை

வெறும் 7 விமானங்களுடன் மிஞ்சியிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்! பெங்களூர்: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதன் உரிமையாளர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கிங்பிஷர் பங்குகளை அன்னிய விமான நிறுவனங்களுடன் விற்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விமானத்துறையில் அன்னிய முதலீட்டை 10 நாட்களுக்கு முன் தான் மத்திய அரசு அனுமதித்தது (இது விஜய் மல்லையாவை காப்பாற்றுவதற்காக என்று கூட கூறப்படுகிறது). இதனால் இப்போது தான் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன என்றார்.
இந்த நிறுவனத்துக்கு ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் இணைந்து ரூ. 8,000 கோடி வரை கடன் கொடுத்துள்ளன, இதை கிங்பிஷர் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதில் ரூ. 5,904 அளவுக்கான கடன்களுக்கு விஜய் மல்லையா நேரடியாக உத்தரவாதம் தந்துள்ளார். இந்த உத்தரவாதத்துக்காக அவருக்கு ரூ. 51 கோடி வரை கமிஷன் தரப்பட்டு வந்தது. ஆனால், கடனையே திருப்பிச் செலுத்தாத நிலையில் அவர் கமிஷன் வாங்குவதற்கு வங்கிகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இந்த ஆண்டு அவர் கமிஷன் எதையும் பெறவில்லை.
இந் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 66 விமானங்களை வைத்திருந்த கிங்பிஷர் நிறுவனத்திடம் இப்போது வெறும் 7 விமானங்களே உள்ளன.
மற்ற விமானங்களை அதை குத்தகைக்குத் தந்த நிறுவனங்கள் திரும்ப வாங்கிச் சென்றுவிட்டன. இந்த விமானங்களுக்கான குத்தகைக் கட்டணத்தைக் கூட மல்லையா செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபரில் 66 விமானங்களைக் கொண்டு தினந்தோறும் 374 உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகளை நடத்தி வந்த இந்த நிறுவனம் இப்போது, நாளொன்றுக்கு 100 சேவைகளைக் கூட வழங்குவதில்லை.
விமானங்களின் எண்ணிக்கை 5க்குக் கீழே குறைந்தால் அந்த நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்தாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 5க்கு கீழே போனபோது அதன் லைசென்ஸ் ரத்தாகி நிறுவனமே மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்ககு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக