வியாழன், 6 செப்டம்பர், 2012

மனைவியின் கையில் சூடம் ஏற்றி கற்பை சோதித்த கணவன்

திருக்கோவிலூர்: மனைவியின் கையில் சூடம் ஏற்றி, கற்பை சோதித்த கணவனை போலீசார் கைது செய்தனர்; மாமியார், கொழுந்தன் உட்பட, ஐந்து பேர் மீது, வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த, பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர், சடையன்,30; மனைவி அலமேலு,27. இவர்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகள் ஆகின்றன; ஆறு வயதில், பெண் குழந்தை உள்ளது. சடையன் வெளிநாடு சென்று, சமீபத்தில் ஊர் திரும்பினார். மனைவி மீது சந்தேகமடைந்து, அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், மனைவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, அவரது கற்பை சோதித்துள்ளார். இதனால் வேதனையடைந்த அலமேலு, திருக்கோவிலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அலமேலுவின் கணவர் சடையன், மாமியார் பெரியாயி, கொழுந்தனார் மணிகண்டன்,28, உறவினர்கள் ராமர், திருமலை, சக்கரை ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிந்து, சடையனை கைது செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக