சனி, 29 செப்டம்பர், 2012

Super Singer Junior 3 வீடு வெல்லப்போவது யார்?

 http://namathu.blogspot.com/2012/10/super-singer-junior-3.html
 latenews

Super Siner Junior 3 ஆஜித் முதல் பரிசை வென்றார்

 தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்டு சுற்று மூலம் இன்னும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டியில் முதலாவதாக வெற்றி பெருபவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இப்பொழுது அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. நான்கு போட்டியாளர்கள் இப்பொழுது முதல் மூன்று இடங்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். இறுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடித்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வெல்லப்போவது யார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 கடந்த 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இறுதியில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுற்றுகள் மூலம் அரை இறுதிச் சுற்றுக்கு நான்கு பேர் தேர்தெடுக்கப்பட்டனர். பாடகர் மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் நடுவர்களாக இருந்து செல்லக்குரல்களை தேர்ந்தெடுத்தனர். இறுதிச் சுற்றுக்கான மூன்று போட்டியாளர்களை பாடகி சாதனா சர்க்கம் மனோ, மால்குடி சுபா ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். சுகன்யா, பிரகதி, கௌதம் ஆகியோர் இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளனர்.
வைல்ட்கார்டு சுற்று நடைபெறுகிறது. போட்டியில் இருந்து வெளியேறிய 10 குழந்தைகள் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று பாடத் தொடங்கியுள்ளனர். அவர்களில் வெற்றி பெரும் ஒருவருக்கு இறுதிச்சுற்றில் பாட வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு உற்சாகமூட்ட உன்னிமேனன், உஷா உதூப், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட சிறப்பு நடுவர்களும் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை மா.பா.க ஆனந்த், பாவனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். சூப்பர் சிங்கர் ஜூனியராக தேர்ந்தெடுப்படுபவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசளிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக