வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கதையை மட்டுமே நம்பி எடுத்த சாட்டை

ஹீரோக்களை நம்பாமல் கதையை மட்டுமே நம்பி எடுத்த நல்ல திரைப்படங்களின் வரிசையில் சாட்டை படத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் நடக்கிற கதை தான் சாட்டை. அரசு பள்ளி என்றாலே அதில் ஆசிரியர்கள் எந்த அளவு வேலை செய்வார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதே போலத் தான் இந்த பள்ளியிலும். ஒரு பக்கம் ஆசிரியர்களின் கவனக்குறைவு, மற்றொரு பக்கம் மாணவர்களின் அட்டகாசம் என ஒழுங்கற்ற முறையில் நடக்கும் பள்ளிக்கூடம் ஒழுங்கான முறையில் நடைபெற உதவுகிறார் அந்த பள்ளியில் புதிதாய் ஆசிரியர் பணிக்கு சேரும் சமுத்திரகனி. 
அசிரியர் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுப்பதைவிட வட்டிபணம் வசூலிப்பதையே முதன்மையாகக் கொண்டு வேலை செய்யும் துணை தலைமையாசிரியர் தம்பி ராமையா, வகுப்பில் ஓ.பி அடிக்கும் மற்ற வாத்தியார்கள்... என குட்டிச்சுவராய் கிடக்கிறது பள்ளி. அந்த மாவட்டதிலேயே பின்தங்கிய பள்ளியாகவும் இருக்கிறது.


இந்த நிலையில் தான் அந்தப் பள்ளிக்கு இயற்பியல் ஆசிரியராக வந்து சேர்கிறார் சமுத்திரகனி. பள்ளியில் இருக்கும் சட்டங்களை ஒவ்வொன்றாக மாற்றுகிறார். மாணவர்களை அவர்கள் போக்கிலே போய் தான் நம் வசப்படுத்த முடியும். அடித்து திருத்துவதை விட நான்கு வார்த்தை அன்பாக பேசினால், அவர்களை நம்ம வழிக்கு கொண்டுவர முடியும் என்று புது பார்முலாவை கொண்டு வருகிறார்.இது மாணவர்கள் மத்தியில் நன்றாக ‘ஒர்க் - அவுட்’ ஆகிறது. அந்த பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் பிடித்த ஒரே ஆசிரியர் சமுத்திரகனி தான். இதனால் மற்ற ஆசிரியர்களுக்கு சமுத்திரகனி மேல் பொறாமை வருகிறது. அதுவும் சமுத்திரகனியை பார்த்தாலே கிழ் இருந்து மேல் வரைக்கும் எரிந்து விழுகிறார் துணை தலைமையாசிரியர் தம்பி ராமையா.அதுமட்டும் இல்லை அவரை பள்ளியில் இருந்து விரட்டவும் அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார் தம்பி ராமையா. இதற்கிடையில் தான் 12 பி வகுப்பின் பழனி, அதே வகுப்பின் அறிவழகிக்கு காதல் டார்ச்சர் கொடுக்கிறார். டார்ச்சர் ஓவராகிக்கொண்டே போக, இந்த விஷயத்தை 
தன் வகுப்பாசிரியர் சமுத்திரகனியிடம் சொல்லி கண்ணீர்விடுகிறார்.ஆசிரியரும் ஆறுதல் சொல்லி அனுப்புகிறார்.  ஆனால், அந்த மாணவி அடுத்த நாள் காலை விஷம் குடித்து, மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலை வருகிறது. அதற்கு காரணம் சமுத்திரக்கனி தான் என்று நினைத்து மாணவியின் உறவினர்கள் அவரை அடித்து நாசம் செய்கிறார்கள். பின்னர் அவர் போலிசில் ஒப்படைக்கப்படுகிறார். இது மற்ற ஆசிரியர்களுக்கு சர்க்கரை சாப்பிட்ட மாதிரி இனிக்கிறது.அந்த மாணவி விஷம் குடிக்க யார் காரணம்? சமுத்திரகனி நல்லவர் தான் என்பதை மற்றவர்களுக்கு எப்படி நிரூபிக்கிறார்? மாவட்டத்திலேயே பின் தங்கிய அந்த பள்ளி எப்படி முதன்மையான பள்ளியாக மாறுகிறது? பழனி - அறிவழகியின் காதல் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி படம்.>சாட்டை படத்தைப் பொருத்தவரை நடிப்பில் முதல் மார்க் வாங்குபவர் தம்பி ராமையா தான்.  தேசிய விருது வரை சென்றதாலோ என்னமோ வரவர நடிப்பில் பொளந்து கட்டுகிறார் மனுஷன். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதிலும், சமுத்திரகனியை பார்த்தாலே எரிந்து எரிந்து விழும் வில்லத்தனத்திலும், சமுத்திரகனியிடம் அடிவாங்கிக்கொண்டு பனியன் டவுசரோடு வீடு திரும்பும் காட்சிகளில் சபாஷ் வாங்குகிறார் தம்பி ராமையா. அடுத்தவர் சமுத்திரகனி, நேர்மையான ஆசிரியரை அப்படியே திரையில் பதிவு செய்திருக்கிறார். நிதானமான அளவான நம்பிக்கை கொடுக்கும் நடிப்பு. சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைக்க ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தோப்பு கரணம் முதல் புத்தகத்தை தலைகீழாக வைத்து படிக்கும் மேட்டர் வரை எல்லாம் ஓ.கே தான். ஆனால், லேடிஸ் டாய்லட்டுக்குள் சென்று வந்த மாணவனை ‘வெரி குட்’ என்று&nபாராட்டுவது எந்த விதத்தில் நியாயம்?வகுப்பறை மேசைகளை காதுகுத்து விழாவுக்காக கொண்டு செல்லும் காட்சியும், அந்த காட்சியில், இதுவாவது பரவாயில்லை! போன வாரம் நம்ம பள்ளிக்கூடத்துலதான் ஒரு கல்யாணமே நடந்தது! என்ற வசனமும், இதெல்லாம் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறது என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறதுசகாயனே... சகாயனே...’ இமான் இசையில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக