புதன், 26 செப்டம்பர், 2012

பாரதிராஜா வைகோவை சாடினார் பேசிப்பேசியே தமிழர்களை மழுங்கச் செய்து விட்டார்

சென்னை::இந்திய கம்யூனிஸ்ட் ,மாநில செயலர் பாண்டியன் பிறந்தநாள் விழாவில், இயக்குனர் பாரதிராஜாவுக்கும், வைகோவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலர் தா. பாண்டியனின், 80 வது பிறந்தநாள் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க.,வைத் தவிர, இதர கட்சிகளின் சார்பில் தலைவர்கள் பங்கேற்று பேசினர். விழாவில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, "" ஈழப்பிரச்னையில் நாம் தோற்று விட்டோம்; திராவிடம் பேசி, நம்மை அழித்து விட்டனர். ஒரு இனம் அழிவதை, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்; இவர்கள் பேசியே, தமிழர்களை மழுங்கச் செய்து விட்டார்கள்'' என்றார். விழாவில் வைகோ பேசியதாவது: அரசியல்வாதிகளை பாரதிராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். நாகரீகம் இல்லாமல், பாரதிராஜா விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இவரது கொள்கை உணர்வு ,எங்களுக்கு தெரியும். இதுபோல, கருத்து சொன்ன பாரதிராஜா, பதில் வரும் வரை காத்திருக்காமல், ஏன் ஓடிவிட்டார் என்று தெரியவில்லை. இவ்வாறு பேசிவிட்டு, வைகோ உடனே கிளம்பியதால், விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.; poonththalir@hotmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக