திங்கள், 10 செப்டம்பர், 2012

மோடி அதிர்ச்சி, சிவசேனா தலைவர்: சுஷ்மா சுவராஜ் தான் பிரதமர் பதவிக்கு


புதுடில்லி:"பா.ஜ.,வில், பிரதமர் பதவி வேட்பாளருக்கு பொருத்தமானவர், சுஷ்மா சுவராஜ் தான்' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
அடுத்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என, செய்திகள் வெளியாகின. ஆனால், கூட்டணியில் உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். "மதசார்பற்ற கொள்கை உடைய ஒருவரையே பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்று கூறினார்.இதனால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி உட்பட, பா.ஜ., தலைவர்களில், வேறு யாராவது ஒருவர், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என, மீண்டும் வதந்திகள் கிளம்பின.
எது எப்படி இருந்தாலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர். இதை அறிந்து தான் காங்கிரஸ் பல வழிகளில்  மோடியை வரவிடக்கூடாது என்று முனைப்பாக உள்ளது.  
சோ ராமசாமி:, இப்போது ஆயிரம் கருத்துக்கள் எழுந்தாலும், தேர்தல் அறிவித்த பின்பு தான் பிரதமர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடுவார்கள். பிஜேபி யாரை நிறுத்தினாலும் பிஜேபி தான் அடுத்து ஆட்சி அமைக்கும். ஒரு சமீபத்தைய கருத்து கணிப்பு, பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் 400 தொகுதியை கைப்பற்றும் என்றும், மோடி அல்லாத ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் 250 தொகுதிகளை கைப்பற்றும். எது எப்படி இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி பிடிப்பது கானல் நீர். இனி திமுக காங்கிரஸ் கூட்டணி நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந் நிலையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தன் கட்சி பத்திரிகையான "சாம்னா'வுக்கு அளித்துள்ள பேட்டி:பா.ஜ.,வில் உள்ள தலைவர்களில் மிகவும் திறமையானவர், சுஷ்மா சுவராஜ். புத்திசாலியான அவர், கடினமாக உழைக்கக் கூடியவர். பா.ஜ., கட்சியை பொறுத்தவரை, பிரதமர் வேட்பாளருக்கு, சரியான தேர்வு, சுஷ்மா சுவராஜ் தான்.
இதை பலமுறை நான் கூறியுள்ளேன். கடந்த காலங்களில், வாஜ்பாய் போன்ற தலைவர்களால், தே.ஜ., கூட்டணி பலமாக இருந்தது. இப்போது, திறமையான தலைவர்கள் இல்லை. இது, தே.ஜ., கூட்டணியை பற்றிய, என்னுடைய கருத்து. பா.ஜ.,வை பற்றியதல்ல."காங்கிரஸ், பா.ஜ., அல்லாத கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் தான், அடுத்த பிரதமராவார்' என, அத்வானி கூறியதை ஏற்க முடியாது. அவர், ஏன் இவ்வாறு கூறினார் என, தெரியவில்லை.இவ்வாறு பால் தாக்கரே கூறியுள்ளார். பால் தாக்கரேயின் இந்தக் கருத்து, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பல்பீர் புஞ்ச் கூறுகையில்,
"" பா.ஜ.,வில் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர். பால் தாக்கரேயின் பேட்டி குறித்து, எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை,'' என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், "" 2007ல், தே.ஜ., கூட்டணியில், பிரதமர் பதவிக்காக ஓரிரு தலைவர்களே காத்திருந்தனர். இப்போது, காத்திருப்போரின் எண்ணிக்கை, இரட்டிப்பாகி விட்டது. தேர்தலுக்கு முன்பே, பிரதமர் வேட்பாளர் குறித்து, தே.ஜ., கூட்டணியினர் பேசுவது, அந்தக் கூட்டணி, பெரும் சிக்கலில் இருப்பதை உணர்த்துகிறது,'' என்றார்.

காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறுகையில், ""தே.ஜ., கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர், சுஷ்மா தான், என, பால் தாக்கரே கூறியுள்ளார். எனவே, மகாராஷ்டிராவில், சிவசேனா கட்சியினரால், பீகார் மக்கள் தாக்கப்படும் விஷயத்தில், தன் நிலை என்ன என்பதை, சுஷ்மா தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
மோடி அதிர்ச்சி
"மும்பையிலிருந்து வெளியேற வேண்டும்':
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் கூறியதாவது:பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோர், பீகார் மாநிலத்தவருக்கு எதிராக, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். மும்பையிலிருந்து, பீகார் மக்களை வெளியேற்றப் போவதாக, இவர்கள் மிரட்டியுள்ளனர். தாக்கரே குடும்பத்தினரின் பூர்வீகமே, பீகார் தான். எனவே, அவர்கள், முதலில் மும்பையிலிருந்து வெளியேற வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், நாட்டின் எந்த பகுதியில் வசிக்கவும், பணிபுரியவும் உரிமை உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக, பீகார் மக்கள் கடுமையாக உழைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் வசிப்பதற்கு, அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில், தாக்கரேக்களுக்கு பதிலடி கொடுக்க, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தயக்கம் காட்டுகிறார்.இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக