வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தமிழகத்தில் சிங்கள விரோதம் இலங்கைத் தமிழர்களுக்கு தீமை

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம்
இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்துவிட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஷ....|| பேச்சுக்கள் அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஷ கொடும்பாவி எரிப்பு@ சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு| என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள்
திடீர் உண்ணாவிரதங்கள்@இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம் அதைத் தொடர்;;ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம்@ மத்திய அரசுக்கு மிரட்டல்கள்.. என்று - இலங்கை அரசின் பிடிவாததம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் சில சர்ச்சுக்களுக்கு யாத்திரையாக இலங்கையிலிருந்து வந்தவர்கள், “நாம் தமிழர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையிலிருந்து வந்த யாத்திரிகர்களில் பலர் தமிழர்கள் என்பது பற்றி “ நாம் தமிழர்|| கவலைப்படவில்லை. யாத்திரீகர்களுக்குத் தரப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பையும் மீறி இந்த வெறித்தனம் நடந்திருக்கின்றது. தாக்கப்பட்டவர்களில் தமிழர் யாரும் இல்லையென்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொண்டால் கூட, இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே. சிங்களவர் மீது எப்படியாவது விரோதத்தை வளர்ந்து விடுவது- என்று இந்த மாதிரி அமைப்புக்களும் , சில தனி நபர் சுயநிர்ணய தமிழ்த்தலைவர்களும் முனைத்திருக்கின்றனர். இவர்களுடைய வன்முறைப் பேச்சுக்களும் மொழித்துவேஷப் போஸ்டர்களும் பிரிவினைவாத கோஷங்களும் இலங்கைத் தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கும். இரு நாடுகளுக்கிடையேயான உறவைக் கெடுக்கும்;@ அது மட்டுமன்றி தமிழகத்திலும் கூட பிரிவினைவாதமும் மொழி வெறியும் மீண்டும் தலைதூக்க வழி செய்துவிடும்.

இலங்கையில் பிரிவினைவாதக் கோரிக்கை தோன்றியதற்கும் அது வன்முறையாக உருவெடுத்ததற்கும் சிங்கள அரசின் மூர்க்கத்தனம் தான் காரணம். தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி, அவர்களுக்கு மொழி உரிமையிலிருந்து கல்வி உரிமைவரை பல உரிமைகளையும் மறுத்து, அவர்களைப் பிரிவினைப் பற்றி நினைக்க செய்தது தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் தான்.

ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற முயற்சியாக ராஜீவ் காந்தி – ஜெயவர்தத்ன ஒப்பந்தத்தை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தினார். இலங்கைத் தமிழர்களுக்கு அந்த ஒப்பந்தம் செய்ய முனைந்த அளவு நன்மைகளை, இதுவரை வேறு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்கள் (அதாவது முக்கியமாக வடக்கு, ஓரளவு கிழக்கு தமிழர்கள்) விடுதலைப் புலிகளின் தூண்டுதலினால் - இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேச தமிழ்மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.
இந்திரா காந்தி வளர்த்த பித்தரன்வாலா கூட்டம் இந்தியாவில் பிரிவினை உண்டாக்க முயன்றது மட்டுமன்றி இந்திரா காந்தியையே கொலை செய்தது. இந்திரா காந்தியினால் ஆயுத உதவியும் இராணுவப் பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கைத் தமிழர்களுக்கான நல்ல தீர்வை தடுத்ததுமின்றி இந்திரா காந்தியின் மகனையே கொன்றனர்.
இந்திய உதவி இல்லாமல் வளர்ந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் - இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து, சிங்களவர்களை சகோதரர்களாகக் கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேறச் சொல்லியது, அந்தக் கூட்டம். இலங்கையில் இருந்த தமிழ்த்தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவித் தமிழர்களைக் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்தக் கூட்டத்திற்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

பல வருடங்களாக நடந்து வந்த புலி –அரசு மோதல்களின் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறிவிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்னை தீர்வதை விரும்பவில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பிச் செல்லவேண்டும் என்று கோருவது போல, சில நாடுகளில், குரல்கள் எழலாம். “உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே! ஆகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்|| என்று சில நாடுகளில் சில அமைப்புக்கள் கூறத் தொடங்கலாம்.

இதைவிட முக்கியமாக  இப்போது, “ஈழம் பெறுவதற்கான போர்@ அதற்கான ஆயத்தங்கள் செய்ய நிதி தேவை|| என்றோ - இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால், அவர்களுக்கு உதவ நிதி தேவை என்றோ – அல்லது இம்மாதிரி வேறு காரணங்களைக் கூறியோ – அயல்நாடுகள் சிலவற்றில் இலங்கைத் தமிழ் முக்கியஸ்தர்கள் பணவசூல் நடத்துகின்றார்கள்@ இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்திற்குப் பணம்@ ஆதிக்கத்திற்கு ஆதிக்கம். இது தொடரவேண்டும் என்றால் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக் கொண்டுவிடக்கூடாது. ஆகையால், இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல்நாட்டு அமைப்புக்கள் முன்பு காட்ட, அயல் நாடுகளுக்குச் சென்று, ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழ்கிற் இலங்கைத் தமிழர்கள் முயல்கிறார்கள்.

இந்த ஈழ பிஸினஸ் தொடர்வதற்காக, அவர்கள் வசூல் செய்கின்ற நிதியில் ஒரு பங்கு, இதற்கான பிரச்சாரத்திற்காகச் செலவிடப்படுகின்றது. அந்த நிதி உதவி எங்கெங்கே செலவாகின்றது. யார் யாருக்கு பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பதெல்லாம், இலங்கை அரசு ஆராயவேண்ய விஷயங்கள். ஆனால், இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக, இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பதை நாம் நம்பிவிடக்கூடாது.

தமிழர்கள் பிரச்னை, தீரவில்லை என்பது உண்மை, அதைத்தீர்ப்பதில் இலங்கை அரசு இன்னமும் முனைப்பு காட்டவேண்டும் என்பது நியாயம், ஆனால், தமிழர்களை இன்றும் இலங்கை விரட்டுகின்றது என்பது உண்மையல்ல.

மிகச் சிறிய நாடாகிய இலங்கை – சாதாரண இராணுவ பலம் கொண்ட இலங்கை – உலகத்திலேயே சப்- மரின் முதல் விமானம் வரை சேர்த்துவைத்திருந்த, தன் மக்களையே கேடயங்களாக பயன்படுத்திய, சிறுவர்களை முன்னிறுத்தி பலிக்கடாக்களாக்கத் துணிந்த, தமிழ்த்தலைவர்களை எல்லாம் கொன்று போட்ட,ஒரு கொலைகாரக் கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகியது.

அதை எதிர்கொண்டு அந்தக் கூட்டத்தை இலங்கை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனை. அந்த மாதிரி ஒரு வெறிச் சக்தியை இலங்கை அரசு எதிர்கொண்டபோது, பல சிவிலியன்கள் உயிரிழக்க நேரிட்டது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால் சிவிலியன்களைக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியபோது , ஆஸ்பத்திரிகளில் பதுங்கி, புலிகள் தங்கள் தாக்குதல்களை நடத்தியபோது, இராணுவத்தின் எதிர்தாக்குதலில் சிவிலியன்கள் உயிர் இழப்பு எப்படி தவிர்க்கப்படும்? இதற்கு சிங்கள அரசைக் காரணமாக்குவதை விட புலிகளை காரணமாக்குவது தான் நியாயமாக இருக்கும்.

காஷ்மீர் தீவிரவாதிகளை இந்திய இராணுவம் எதிர்கொள்கிறபோது நேரிடுகின்ற சிவிலியன் உயிர்இழப்புக்களுக்குக் காரணம், சிவிலியன்களிடையே ஒழிந்து கொள்கிற அந்தத் தீவிரவாதிகளா அல்லது இந்தியா இராணுவமா?

காஷ்மீர் முஸ்லிம்களுக்காக நாங்கள் போராடுவோம் என்று கூறிக் கொண்டு, பல அட்டூழியங்களை செய்து வருகின்ற பாகிஸ்தானியர்களின் செயலுக்கும் தமிழகத்தில் சிலரால் பேசப்படுகின்ற தொப்புள் ‘கொடி நியாயம்| பொருந்துமா?

இதைப் பார்ப்பது போல தான் இலங்கை விவகாரத்தையும் நாம் பார்க்கவேண்டும். நமக்கு ஒரு அளவுகோல்@ இலங்கைக்கு வேறொரு அளவுகோல் என்பது நேர்மையான அணுகுமுறை அல்ல. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்காக அல்ல பல்லாயிரக்கணக்கான கண்ணிவெடிகள், புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நீக்கிவிட்டுத் தான் முழுமையான குடியேற்றம் நடத்தமுடியும். இதனால் ஏற்படுகின்ற தாமதத்திற்கு இலங்கை அரசா பொறுப்பு?

இந்திய அரசு அங்கே ரயில் பாதை அமைக்கிறது (ஏற்கனவே இருந்தது புலிகளினால் தகர்க்கப்பட்டது) ஆனால் அங்கெல்லாம் இருக்கிற கண்ணிவெடிகளை அகற்றவேண்டுமே? அதை இந்தியா செய்யவில்லை.இலங்கை இராணுவம் அந்தப் பணியைச் செய்து தருகின்றது.

பெரும்பாலானோர் முகாம்களிலிருந்து தங்கள் இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய அமைப்பு கூட பிரிவினையைக் கைவிட்டு விட்டது. அப்படியிருக்க, இங்கே சிலர் இன்னமும் இலங்கையைப் பிளக்கவேண்டும் என்று கோருவத, இலங்கைத் தமிழர்களுக்குத் தருகின்ற தொல்லையைத் தவிர வேறொன்றும் இல்லை.

“சீன நட்புக்கு கை நீட்டுகின்ற இலங்கையுடன் நமக்கு ஏன் நட்பு?|| என்ற கேள்வி ஒன்று இப்போது ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது. சீனாவும் இலங்கையும் நெருங்குவதற்குப் பாலம் அமைத்துக் கொடுத்ததே இந்தியா தான் என்பது நம் கருத்து. அது இ;ப்போது இலங்கைக்கு வசதியாகப் போய்விட்டது. இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் உதவி பெறுவதற்கு இந்த நிலை இலங்கைக்கு உதவுகின்றது.
இலங்கைக்கு மிகவும் தேவைப்பட்டபோது இராணுவ உதவிகளையும் ஆயுத விநியோகத்தையும் செய்ய மத்திய அரசு தயங்கியது. தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற  அனாவசியமான அச்சம் மத்திய அரசுக்கு வந்ததால், இலங்கைக்குச் செய்திருக்கக்கூடிய சில உதவிகளை இந்திய அரசு செய்யவில்லை. அந்த நேரத்தில் சீனா உள்ளே நுழைந்தது. இதற்கு இலங்கையைப் பழிப்பதினால் என்ன பயன்?

நமக்கு இலங்கையுடன் வர்த்தக உறவு விரிவாக உள்ளது. தமிழகத்திற்கே கூட இலங்கையின் சந்தை பயன்படுகின்றது. மோட்டார் வாகனங்களிலிருந்து துணிமணிகள் வரை பல பொருட்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் செல்கின்றன.

இதைத் தவிர இலங்கையில் பிரிவினை வாதம் வளர்வது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுடன் தமிழகத்தையும் இணைத்து அகண்ட தமிழகம் பற்றி முன்பு ஒரு பேச்சு எழுந்தது உண்டு. இது தவிர தமிழகத்தில் உள்ள சில தமிழ்த்தீவிரவாத குழுக்கள் - இந்திய ஒருமைப்பாட்டை எதிர்க்கின்ற அமைப்புக்கள் - தங்களை வளர்த்துக் கொள்ள, இலங்கைத் தமிழர் பிரச்னை பெரிதும் உதவும். இதையெல்லாம் மனதில் கொள்கிறபோது இந்திய - இலங்கை நட்புறவு பலப்படுவதே நமது லட்சியமாக இருக்கவேண்டும்.

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு பெரும் தவறு@ அத்தீர்மானத்தை இந்தியா எதிர்த்திருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப் பெறுவதற்கு அது உதவியிருக்கும். இப்போது தமிழக அரசு, இலங்கையிலிருந்து வந்த காற்பந்து ஆட்டக்காரர்களைத் திருப்பி அனுப்பியதும் தவறு@ இது தமிழர் பிரச்னையைத் தீர்க்க உதவக்கூடிய செயல் அல்ல.இரு நாடுகளுக்கிடையே கலாச்சார, விளையாட்டு பந்தய உறவுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அது கெடுவது, நல்லதே அல்ல. இதை இலங்கைத் தமிழர்களே விரும்பவில்லை என்பது செய்திகளிலிருந்து தெரிகின்றது. .இலங்கைத் தமிழர்கள் எனும்போது ஒரு உண்மை நினைவில் வைக்கத்தக்கது. கொழும்புவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் , Plantation தமிழர்களுக்கும் - வடப்புறத் தமிழர்களுடன் நல்லுறவு இல்லை. கிழக்குத் தமிழர்கள் கூட இப்போது வடக்குத் தமிழர்களை முழுமையாக ஏற்பதில்லை. இப்படிப் பல வித்தியாசங்களைக் கொண்ட தமிழர்களில் வடக்குத் தமிழர்களை மட்டுமே மனதில் கொண்டு தமிழகத்தில் போராட்டங்கள், திடீர் உண்ணாவிரதங்கள், வீராவேச பேச்சுக்கள் எல்லாம் நடக்கின்றன. இலங்கையில் , கொழும்பு தமிழர்களும்  Plantation தமிழர்களும் - இலங்கை அரசில் இடம்பெற்று வருகின்றார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? அவர்களது அமைதியைக் கெடுக்கின்ற வகையில், இங்கு இலங்கை அரசை விமர்சனம் செய்வது விவேகம் தானா?

இன்றோ வடக்குத் தமிழர்கள் கூட, பிரிவினைக் கோஷத்தைக் கைவிட்டு “சம உரிமை|| கோரிக்கையைத் தான் வலியுறுத்துகின்றார்கள். அவர்களுடைய அந்த கோரிக்கைக்கு உதவுவதே இந்திய அரசின் கடமை. இதை நட்பு மூலமாகச் செய்ய முடியுமே தவிர, பகைமையினால் சாதிக்கமுடியாது.

“தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தியதால், வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதத்தை தோற்றுவிக்க உதவியது நாங்கள் தான்|| என்ற உண்மையை உணர்;ந்து இனி தமிழர்களிடையே நம்பிக்கையை வளர்க்க இலங்கை அரசு முனையவேண்டும்.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு@ குடிபெயர்;ந்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்கு விரைவான ஏற்பாடுகள், தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்குச் சமமான அந்தஸ்து, படிப்பிலிருந்து வேலை வாய்ப்பு வரை சிங்களவர்களுக்குச் சமமாமக தமிழர்களுக்கும் உரிமைகள்@ இந்தியாவில் உள்ளது போல் சமஷ்டி (பெடரல்) அரசியல் அமைப்பு@ ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்ப்படுத்துவது போன்றவற்றை இலங்கை அரசு முனைந்து விரைவில் செய்து முடிக்கவேண்டும்.

இலங்கையில் வாழ்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களும் பிரிவினைவாதம் பேசுகிறவர்களைப் புறக்கணித்து சிங்களவர்களுடன் சம உரிமை பெற்று வாழ்வில் திருப்தி காணவேண்டும். தமிழகத்தில் உள்ள சில , ஓட்டு இல்லாத தலைவர்கள், தங்களுக்கு “ஈழம்|| பெற்றுத் தந்து விடுவார்கள் என்கின்ற எண்ணத்தை இலங்கைத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ளக்கூடாது. அந்த மாதிரி பேசுபவர்களுக்கு தமிழகத்திலேயே ஆதரவு கிடையாது என்பதை வடக்குத் தமிழர்கள் உணரவேண்டும்.

முன்பு, ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து வீராவேசமாகக் குரல் கொடுத்தன. இந்த எதிர்ப்பினால் அமெரிக்கப்படைகள் போர் நிறுத்தம் செய்துவிடும் என்று நம்பிய சதாம் உசேன், சூரத்தனம் காட்டி தனது முடிவை எய்தினார். இப்படி வெளியிலிருந்து எந்தப் பாதிப்பும் இல்லாமல் “தர்மக்கூச்சல்|| போடுகிறவர்களை நம்பி நாசம் அடைந்த சதாம் உசேன் போல், இலங்கைத் தமிழர்கள் நடந்து கொள்ளக்கூடாது.

தமிழகத்திலிருந்து ஈழம் பற்றி வாய் கிழிய பேசுகிறவர்களுக்கு அதனால் நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு அது தீமை செய்யும். இதை உணர்ந்து வடக்கில் வாழ்கின்ற தமிழர்களும் சமஉரிமை கோருகின்ற , பிரிவினை கோஷத்தையும், வன்முறையையும் நாடாத தலைவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆதரவளித்து அமைதியை நாடவேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை பெற்றுத் தருவதில், இந்திய அரசுக்கு பொறுப்பு உண்டு. ராஜரீக நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து தருகின்ற உந்துதலினாலும் வர்த்தக சலுகைகள், கூட்டமைப்பு, தீர்மான உதவிகள் போன்றவற்றினாலும் இந்திய அரசு, இலங்கை அரசை இவ்விஷயத்தில் நியாயமான பாதைக்குத் திருப்புவதில் முனையவேண்டும்.

தமிழகமும் இதற்கு உதவியாக இருக்கவேண்டும். தமிழகத்தில் சிங்கள விரோதத்தையும் இலங்கை அரசின் மீதான வெறுப்பையும் வளர்த்து வருகின்ற துவேஷ மற்றும் பிரிவினைவாத பிரச்சாரங்களை அடக்கவேண்டும். இது எதிர்காலத் தமிழகத்திற்கே கூட நல்லது. இல்லாவிட்டால் இங்கேயும் கூட ஒரு வன்முறை நிறைந்த பிரிவினைவாதப் பிரச்சாரத்திற்கான விதை ஊன்றப்பட்டு விடக்கூடிய ஆபத்து உண்டு.

அதே சமயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தரும் பாதையில், இலங்கை அரசைத் திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தூண்டுவதும், அம்மாதிரி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உதவுவதும் தமிழகத்தின் பொறுப்பு.

இவையெல்லாம் ஒரு தினத்தில் நடப்பவையல்ல. காலம் வேண்டும். அதற்கான பொறுமையைக் காட்டுவது, இந்தியாவின் கடமை என்றும்-  அந்தப் பொறுமை எல்லை மீறாமல் பார்த்து கொள்கிற வகையில் விரைவாகச் செயற்படுவது இலங்கை அரசின் கடமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக