செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மனிதநேயமற்ற ஆஸ்பத்திரி டாக்டர்கள் : இறந்த உடலுக்கு அருகே போராடும் மூதாட்டி

திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்து இரண்டு நாட்களான நிலையில் முதியவர் ஒருவரின் உடல் மீட்கப்படாமல் கிடந்தது. அந்த உடல் அருகே இன்னொருபெண்மணி ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தின் தாலுகா ஆஸ்பத்திரிகளில் ஒன்று அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரி. இங்கு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ஆண்,பெண் உள்நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகள், வெளிநோயாளிகள் சிகிச்சைபெறும் பிரிவு, ரத்த வங்கி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு பணிபுரியும் டாக்டர்கள் பணிக்கு நேரத்திற்கு வராமல் மக்களை அலைக்கழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
ஆஸ்பத்திரியின் முகப்பில் உள்ள ஒரு அறையில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவர் உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் அவர் இறந்து இரண்டு நாட்களாவது இருக்கும் என தெரியவந்தது.பொதுமக்களின் தகவலின் பேரில் அம்பை போலீசார் வந்து அவரது உடலை எடுத்துச்சென்றனர். அதே பகுதியில் சிகிச்சையளிக்கவேண்டிய மூதாட்டி ஒருவர்அனாதையாக விடப்பட்டுகிடந்தார். அவரும் இப்படியே விடப்பட்டால் இறந்துபோக வாய்ப்புள்ளது.

ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளாகவே உயிர் இழந்தும், உயிரோடும் அவதிப்படுபவர்களை அந்த பகுதியில் நடந்து செல்லும் டாக்டர்களோ, ஆஸ்பத்திரி ஊழியர்களோ கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ராமநாதனிடம் கேட்க முயற்சித்தபோது அவரது மொபைல் எண் நீண்ட நேரமாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் பொதுமக்களே கலெக்டரின் உதவியாளருக்கு தெரிவித்தனர். இதனால் முதியவரின் உடலை போலீசார் மீட்டுச்சென்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக