ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஈவ்டீசிங்கால் மாணவி தற்கொலை 9ம் வகுப்பு மாணவன் கைது

தூத்துக்குடி அருகே மாணவி தீக்குளித்து இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக 9ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் சீனிநகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (14). தூத்துக்குடியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி தமிழ்ச்செல்வியை கேலியும், கிண்டலும் செய்து வந்தார். இதில் மனமுடைந்த தமிழ்ச்செல்வி கடந்த 25ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘சங்கர் அடிக்கடி கேலியும், கிண்டலும் செய்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக‘‘ கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தமிழ்ச்செல்வி இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவன் சங்கரை கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக