ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அனுஷ்கா ஜார்ஜியாவிலேயே 85 பேருக்கு மது விருந்து கொடுத்ததார்

நடிகை அனுஷ்கா 80 பேருக்கு மது விருந்து கொடுத்து, கலாச்சாரத்துக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்று உள்ளூர் லெட்டர் பேட் அரசியல் கட்சி ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
நடிகை அனுஷ்கா இரண்டாம் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் பட ஷூட்டிங்குக்காக ஜார்ஜியா போயிருந்தார் அனுஷ்கா அவருடன் யூனிட்டைச் சேர்ந்த 85 ஆண்கள் இருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்ததும், இவர்கள் அனைவருக்கும் மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஜார்ஜியாவிலேயே இந்த விருந்து நடந்துள்ளது.
படப்பிடிப்பு கடைசி நாளில் அனுஷ்கா தன் சொந்த செலவில் இந்த விருந்தை நடத்தினார். ஜார்ஜியாவில் உள்ள ஒயின் வகைகள் பிரபலமானவையாகும். 80 பேருக்கும் பெட்டி பெட்டியாக ஒயினை வரவழைத்துக் கொடுத்தாராம்.
அனுஷ்காவின் இந்த செயலை இந்து மக்கள் கட்சி என்கின்ற லெட்டர் பேட் அமைப்பு  கண்டித்துள்ளது.
அக்கட்சியின் நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனுஷ்கா 80 பேருக்கு மது விருந்து அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. (ஏன்யா உனக்கும் வாங்கி தரலியே என்கின்ற வயிறு எரிச்சலா?) படக்குழுவினருக்கும் வேறு ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து இருக்கலாம். மது விருந்து என்பது பண்பாட்டுக்கு விரோதமானது.

இதன் மூலம் அன்னிய கலாச்சாரத்தோடு ஒன்றி இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அனுஷ்கா யோகா ஆசிரியை என்கின்றனர். யோகாவில் இதைத்தான் கற்றாரா? என்று புரியவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக