வியாழன், 20 செப்டம்பர், 2012

விமல் ஓவியாவுடன் 3வது படம் சில்லுனு ஒரு சந்திப்பு.

புதுமுக இயக்குனர் ரவி லல்லின் இயக்கத்தில் நடிகர் விமல், ஓவியா ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘சில்லுனு ஒரு சந்திப்பு’. விமல் ஓவியாவுடன் நடிக்கும் மூன்றாவது படம் சில்லுனு ஒரு சந்திப்பு. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமல் சில்லுனு ஒரு சந்திப்பு படத்தில் பாடியுள்ள பஸ்ஸு பஸ்ஸு எந்த ரூட்டு எனக்கு வேணும் டிரைவர் சீட்டு என்ற பாடலை பாடிக்காட்டினார். தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய போது “நான் எல்லார்கிட்டயும் நல்லா பேசுவேன். இன்னும் கொஞ்ச நாள் உங்க கிட்ட பேசிகிட்டே இருந்தா வெக்கம் போயிடும். கூத்து பட்டறைல நடிச்சு வந்ததால இங்கிலீஷ் பேசுறது எல்லாம் கஷ்டமா இருக்கு.
சாதாரண நகரத்து பையனா மாற இன்னும் நிறைய கத்துக்கணும்.ஓவியா ஏன் என் கூட அதிகமா நடிக்கிறாங்கனு என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்? ஓவியாவ நானா போட்டேன் அவங்க தான் போட்டாங்க. இனி எந்த படத்துலயாவது ஓவியானு பேர் சொன்னாலே நான் நடிக்க மாட்டேனு சொல்லிடுவேன். அவங்களுக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.&இரண்டு ஹீரோ கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறதுக்கு காரணம் கதை தான். நல்ல கதை இருக்க படத்தை ஏன் இன்னொரு ஹீரோ கூட நடிக்கக்கூடாதுனு தான் நடிக்கிறேன். இந்த படத்துல ஓவியா, திபா ஷா என இரண்டு ஹீரோயின். இவங்க இரண்டு பேருமே பெஸ்ட் தான். இருவரும் என் இரு கண்கள்” என கண்ணடித்துக் கொண்டே நகைச்சுவையாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக