ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

30% தான் இனி ஸ்டாலின் கோஷ்டி மீதி இனி எந்த கோஷ்டி? அழகிரி?

 Dmk Face Polls With Youth Power தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30% இனி ஸ்டாலின் கோஷ்டிதான் : திமுக தலைவர் கருணாநிதி

விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 விழுக்காட்டினர் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதன் மூலம் திமுகவில் ஸ்டாலின் கோஷ்டியினருக்கான முக்கியத்துவத்தை கருணாநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாகவே அழகிரி கோஷ்டியினர் கருதுகின்றனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது:

இன்றைக்கு என்னதான் ஸ்டாலின் இளைஞர்களின் நாயகன் என்று புகழப்பட்டாலும், என் மகன் தான் அவன், என்று நான் பெருமை அடைந்து கொள்கிறேன். அப்படிப்பட்ட இளைஞர்களில் இன்றைக்கு தன்னைத்தானே வளர்த்துக்கொண்டு, தங்களுக்கு கிடைத்த வலிமையை ஆற்றலை, பெருமையை கழகத்துக்காக அர்ப்பணிப்பது என்ற உணர்வோடு பணியாற்றுகிற காட்சியை நான் நாடெங்கும் காண்கிறேன்.
இளைஞர்களின் எழுச்சியை ஊர்வலங்களில் பேரணிகளில் காண்கிறேன். நாளைய நாயகர்கள் நீங்கள், நாளைய எதிர்காலம் பெற்றவர்கள் நீங்கள், ஸ்டாலினை மாத்திரம் அல்ல இளைஞர் அணி என்கிற அந்த அமைப்பையே நாளைய தினம் நம்முடைய சமுதாயத்தை காப்பாற்ற கடமைப்பட்ட பொறுப்புள்ள அமைப்பு என்று கருதுகிறேன் நான்.
30% இளைஞர்களே வேட்பாளர்கள்
இனி வருகிற தேர்தல்களில் ஏற்கனவே நின்றவர்கள் தான் நிற்க வேண்டும் என்று இல்லாமல் மூத்தவர்கள் தான் நிற்க வேண்ம் என்று இல்லாமல் 30 விழுக்காடு வேட்பாளர்களில் இளைஞர்கள் இருக்க வேண்டும். 30 விழுக்காடு இளைஞர்களுக்கு 5 அல்லது 10 விழுக்காடு பெண்களுக்கு இடம் தர வேண்டும் என்று உங்களுடைய எழுச்சியையெல்லாம் பார்க்கும் போது, இந்த நெஞ்சத்திலும் அந்த எண்ணம் எழுகிறது. அந்த எண்ணத்தை விரைவிலேயே செயல்படுத்த பேராசிரியர் போன்ற மூத்ததலைவர்களிடம் கலந்து பேசி எத்தனை விழுக்காடு இளைஞர்களுக்கு ஒதுக்கலாம் என்று வெளியிட இருக்கிறோம்.
விருதுகள்
முன்னதாக பெரியார் விருதை மும்பை பொ. அப்பாத்துரைக்கும், அண்ணா விருதை அ.ரகுமான்கானுக்கும், பாவேந்தர் விருதை சுப்பு லட்சுமி ஜெகதீசனுக்கும், கலைஞர் விருதை ஆர்.டி.சீத்தாபதிக்கும் கருணாநிதி வழங்கினார்.
பரிசுகள்
மேல்நிலைப் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பும், சான்றிதழும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிதியளிப்பு, சான்றிதழும் மற்றும் சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கத்தையும் கருணாநிதி வழங்கினார்.
அண்ணா சிலை
இதேபோல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்றத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 அடி உயர அண்ணா சிலையை கருணாநிதி திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக