டெல்லி: 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் 10-ந் தேதி முதல் சாட்சியான ஸ்ரீவத்சாவை முன்னாள்
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா குறுக்கு விசாரணை செய்ய டெல்லி
சிறப்பு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் துணை
இயக்குநராகவும் ராசாவின் செயலராகவும் பணியாற்றியவர் ஏ.கே.ஸ்ரீவத்சவா.
இவரிடம் ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பல்வா தரப்பு குறுக்கு விசாரணை செய்தது
முடிவடைந்த நிலையில் தம்மை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி ஆ.ராசா
நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.இம்மனு மீது இன்று விசாரணைக்கு வந்த போது ஆ. ராசா, ஸ்ரீவத்சாவை குறுக்கை விசாரணை செய்ய அவகாசம் தேவை என்றும் தமது வழக்கறிஞர் சுஷில்குமார் இந்த வாரம் நீதிமன்றத்துக்கு வர இயலாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து வரும் 10-ந் தேதி முதல் ஸ்ரீவத்சாவிடம் குறுக்கு விசாரணை செய்யலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக