வியாழன், 27 செப்டம்பர், 2012

12 வயது சிறுவனுக்கு 'லிப் டூ லிப்' கொடுத்த கேரி அன்டர்வுட்

Posted by:
Carrie Underwood Gives Lip Lip 12 Year
லூயிஸ்வில்லி, கென்டகி: அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான கேரி அன்டர்வுட் 12 வயது சிறுவனுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து அசத்தி விட்டார். அந்த சிறுவன், கேரியின் தீவிர ரசிகனாம். கேரிக்கு உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசையாம். இதை கேரியிடமே ஒரு நிகழ்ச்சியின்போது அவன் சொன்னதுமே வேகமாக நெருங்கி வந்து தனது குட்டி ரசிகனின் உதட்டில் முத்தமிட்டு அவனது ஆசையை நிறைவேற்றி அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் கேரி.
29 வயதாகும் கேரியிடம் 12 வயது சிறுவன் உதட்டு முத்தம் பெற்ற சம்பவம் கென்டகி, லூயிஸ் வில்லியில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் நடந்தது.
அந்தப் பையனின் பெயர் சேஸ். கேரியின் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அவன், கூட்டத்தோடு கூட்டமாகத்தான் நின்று கொண்டிருந்தான். ஆனால் கையில் வைத்திருந்த சிறிய அட்டைத் தட்டியில் தனது ஆசையை எழுதி காட்டினான். அதைப் பார்த்து கேரி அவனை மேடைக்குக் கூப்பிட்டார்.
பின்னர் சிறுவனை அணைத்துப் பிடித்தபடி அவனிடம் பேசினார். அப்போது தனக்கு 14 வயது இருந்தபோது முதல் முத்தம் கிடைத்ததாக கேரி கூறவே கூட்டத்தினர் கரகோஷித்தனர். சிறுவனுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை.
பின்னர் சிறுவனை நோக்கிக் குணிந்த கேரி, தனது கண்களை மூடியபடி அவனது உதடுகளுடன் தனது உதடுகளைப் பொறுத்தி ஒரு முத்தமிட்டார். இதைப் பார்த்தும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பினர்....
பின்னர் தனது ஆசையை தைரியமாக வெளிப்படுத்திய சிறுவன் மிகவும் புத்திசாலியானவன் என்றும் அவனைப் பாராட்டினார்.
பின்னர் கூட்டத்தினரைப் பார்த்து இதெல்லாம் அரிதான விஷயம். இதைப் பார்த்து நீங்களும் எனக்கு வேண்டும் என்று வந்து விடாதீர்கள் என்று சிரித்தபடி கூறினார்.
பின்னர் சிறுவனைப் பாராட்டியும், அவனுக்கு முத்தம் கொடுத்தது குறித்தும் தனது மகிழ்ச்சியை டிவிட்டரிலும் போட்டு வைத்தார் கேரி.
நம்ம ஊரில் பரவை முனியம்மாதான் அடிக்கடி கச்சேரி பண்ணுறாங்க... என்ன பண்ணுறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக