திங்கள், 27 ஆகஸ்ட், 2012

Wedding Party 2 பெண்கள் உள்பட 17 பேரின் தலையை துண்டித்த தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பார்ட்டியில் நடனமாடிய 2 பெண்கள் உள்பட 17 பேரின் தலையை தாலிபான்கள் துண்டித்துள்ளனர். FIFTEEN men and two women found beheaded in Helmand province, Afghanistan, were executed by the Taliban as punishment for attending a mixed-sex party with music and dancing.

ஆப்கானிஸ்தானில் ஹெல்மந்த் மாகாணம் கஜாக்கி மற்றும் மூஸா காலா மாவட்டங்களுக்கு இடையில் உள்ள ஜமின்தவார் கிராமத்தில் பார்ட்டியில் நடனமாடிய 2 பெண்கள் உள்பட 17 பேரின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். இந்த பகுதி தாலிபான்களின் அதிகாரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 17 பேரின் தலையை துண்டித்தது தாலிபான்கள் தான் என்று ஹெல்மந்த் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தௌத் அகமதி தெரிவித்துள்ளார்.
மூஸா காலா மாவட்ட தலைவர் நேமத்துல்லா கான் கூறுகையில், கிராமத்தினர் இசையுடன் கூடிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் என்றார். அந்த பார்ட்டியில் 2 பெண்கள் நடனமாடியுள்ளனர் என்று தான் சந்தேகிப்பதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் பெண்கள் நடனமாடும் ரகசிய பார்ட்டிகள் நடப்பது சர்வ சாதாரணமான விஷயம். இந்நிலையில் அண்மை காலமாக மக்கள் இவ்வாறு கொல்லப்படுவது அதிகரி்த்து வருவதாக மூஸா காலா மாவட்ட பழங்குடியின தலைவர் ஹாஜி முஸா கான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக