வியாழன், 30 ஆகஸ்ட், 2012

Narendra Modi யின் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: மகாராஷ்டிரத்துக்கு மாற்றம்

மோடிக்கு மற்றொரு அடி! குஜராத்தில் நடைபெறும் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: மகாராஷ்டிரத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத்தில் நடைபெற்று வரும் சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு விசாரணையை மகாராஷ் டிரத்தில் உள்ள நீதிமன் றத்தில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தர விட்டுள்ளது.  
இந்த வழக் கில் கைது செய்யப்பட் டுள்ள குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பிரச் சாரத்துக்காக அவரது சொந்த ஊர் செல்வதற்கும் நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அமித் ஷா தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
அவர் கூறுகையில், குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ளது. எனவே, அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கும்போது, குஜராத்தில் நுழைய அவருக்கு விதிக்கப்பட்ட தடையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். வேண்டுமானால், அவரது நட வடிக்கைகளை சிபிஅய் அதிகாரிகள் கண்காணித் துக் கொள்ளலாம்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அமித் ஷா, குஜராத் துக்குச் செல்ல அனுமதி அளிக்கிறோம். அதே சமயம், இந்த வழக்கின் விசாரணையை குஜராத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. இவ் வழக்கை மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும்'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக